மாஸ் நடிகருக்கு சப்போர்ட் செய்ததால் வந்த வினை.. டாப் நடிகருக்கு எதிராக வாரிசு சதி?
சென்னை: தங்களுக்கு எதிராக மாஸ் நடிகர் களத்தில் குதித்த நிலையில், அவரை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் செயல்பட்டு வந்த அந்த வாரிசு மாஸ் நடிகருக்கு இணையான திரை ஆளுமையை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக பல முயற்சிகளை அடுத்தடுத்து செய்து பார்த்தார். ஆனால், அந்த காலத்திலேயே எதிர்ப்பு தெரிவித்த நடிகர், இப்போதும் டாட்டா காட்டி விட்டார்.
அதுமட்டுமின்றி மாஸ் நடிகருக்கும் தனது முழுமையான ஆதரவை வெளிப்படையாக தெரிவித்த நிலையில், தற்போது அவரும் வாரிசுவுடைய பேட் புத்தகத்தில் இடம்பெற்று விட்டாராம்.

அவரை டார்கெட் செய்யும் விதமாகத்தான் தற்போது அடுத்தடுத்து அவருக்கு தயாரிப்பாளர்கள் கூட கிடைக்காத நிலையை உருவாக்கி வருகின்றனர் என பகீர் கிளப்புகின்றனர்.
நட்புக்கரம் நீட்டிப் பார்த்த வாரிசு: பல வருடங்களாக பல கட்சியினர் டாப் நடிகருக்கு துண்டு போட்டு பார்த்தும் அவர் யாருக்குமே அஞ்சாத சிங்கமாக இருந்து வரும் நிலையில், அவருக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து, அவருக்கு சப்போர்ட் செய்தால், தானாகவே அவர் நம் பக்கம் வந்து விடுவார் என தப்புக் கணக்கு போட்டு நட்புக்கரம் நீட்டிப் பார்த்த வாரிசுவின் நரித்தனத்தை புரிந்துக் கொண்ட நடிகர் ஆளவிடுப்பா தம்பி என எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
நண்பருக்கே சப்போர்ட்: மேலும், தனது முழு ஆதரவும் தனது நீண்ட கால சினிமா நண்பருக்கு மட்டும் தான் என்பதிலும், ஆனால், அதிலும் தான் நேரடியாக தலையிட மாட்டேன் என்பதிலும், அவருக்கு எதிராக தான் யாரிடமும் சேரமாட்டேன் என்பதில் மிகவும் தெளிவாக தனது பாதையில் நடிகர் பயணித்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.
டாப் நடிகருக்கு எதிராக சதி?: இந்நிலையில், மாஸ் நடிகருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் டாப் நடிகருக்கு எதிராக வாரிசு சில சதிகளை நடத்தி வருகிறார் என்றும் தயாரிப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து நடிகருடன் யாரும் படம் பண்ண முடியாத அளவுக்கான வேலைகளில் இறங்கியுள்ளார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இதன் காரணமாத்தான் ஏற்கனவே பக்கத்து ஸ்டேட் தயாரிப்பாளர்களை நடிகர் அணுகத் தொடங்கினார் என்றும் தொடர்ந்து வேறு மாநில தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











