கடைசி நேரத்தில் நம்பர் நடிகைக்கு செக் வைத்த பிரபல நடிகர்.. நடிகையை கன்வின்ஸ் பண்ண போராடும் இயக்குநர்!

By Staff

சென்னை: காப்பி இயக்குநர் படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்து வரும் நம்பர் நடிகைக்கு கடைசி நேரத்தில் நடிகர் நெருக்கடி கொடுத்து சிக்கலில் சிக்க வைத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அந்த இயக்குநர் படம் மற்றும் பிரபல நடிகரின் படம் என்பதால் உடனடியாக யோசிக்காமல் ஓகே சொன்ன நடிகை சில பல கண்டிஷன்களை ஆரம்பத்திலேயே போட்டு இருந்தாராம்.

முதலில் அதற்கு எல்லாம் ஓகே சொன்ன நடிகர் கடைசி நேரத்தில் இப்படியொரு செக் வைத்ததும் நடிகை ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

ஜாக்பாட் வாய்ப்பு

ஜாக்பாட் வாய்ப்பு

கோலிவுட்டில் நடிகையை சமீப காலமாக எந்தவொரு முன்னணி நடிகரும் சீண்டாமல் இருந்து வரும் நிலையில், பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பே கிடைத்ததும் அந்த படத்தில் நடித்து மீண்டும் தனது ரேஞ்சையே மாற்றிக் காட்டுகிறேன் என நடிகை மாஸ் காட்டி வந்த நிலையில், தற்போது தர்ம சங்கடமான ஒரு சூழலில் சிக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

ஆரம்பத்திலேயே கண்டிஷன்

ஆரம்பத்திலேயே கண்டிஷன்

பிரபல நடிகர் படத்தில் நடித்தாலும், தனக்கென சில கண்டிஷன்கள் இருக்கு என ஆரம்பத்திலேயே நடிகை ஓவர் கவர்ச்சியாகவோ, படு நெருக்கமான காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்கிற கண்டிஷனை போட்டிருக்கிறார். ஆரம்பத்தில் என் கதையில் அந்த மாதிரி சீனே இல்லை என இயக்குநர் நடிகையிடம் சொல்லி கன்வின்ஸ் செய்து விட்டார். நடிகரும் அதெல்லாம் வேண்டாம், அவங்க வந்தா மட்டும் போதும் என அனைத்துக்கும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம்.

கடைசியில் செக்

கடைசியில் செக்

முக்கால்வாசி படப்பிடிப்பே முடிந்த நிலையில், தற்போது திடீரென அந்த பிரபல நடிகர் நடிகையை கவர்ச்சியாக காட்ட வேண்டும் என இயக்குநரை தனியாக அழைத்து காதை கடித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி இருப்பதாக கூறுகின்றனர். மேலும், நடிகருடன் சில நெருக்கமான காட்சிகளையும் வைக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம்.

நடிகை அப்செட்

நடிகை அப்செட்

இதுவரை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓரளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளுடன் நடித்து வந்த நடிகைக்கு தற்போது திடீர் சிக்கலாக படு நெருக்கமாக நடிகருடன் நடிக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பதை அறிந்து கொண்ட நடிகை ரொம்பவே அப்செட் ஆகி இயக்குநரிடம் முடியவே முடியாது என மறுத்துள்ளதாக கூறுகின்றனர்.

சமீபத்திய ஹிட்

சமீபத்திய ஹிட்

சமீபத்தில் வெளியான அந்த பிரபல நடிகரின் படத்தில் முன்னணி நடிகை ஒருவரே உச்சகட்ட கவர்ச்சியை காட்டி கன்னா பின்னாவென ஆடையை குறைத்து நடித்த நிலையில் தான் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது என்றும் உங்க படம் ஹிட் ஆகத் தான் இப்படி சில சீன்களை வைத்து இளைஞர்களை கவர வேண்டும் என நைஸாக பேசி நடிகர் இயக்குநரையும் நடிகையையும் பேச விடாமல் மடக்கி விட்டார் என்கின்றனர்.

வேண்டாமென்றால் வீணாகிவிடும்

வேண்டாமென்றால் வீணாகிவிடும்

தனது போர்ஷன் முழுவதையும் 90 சதவீதம் முடித்து விட்ட நிலையில், தற்போது வேண்டாமென்றால் அத்தனையும் வீணாகிவிடும் என்பதால் நடிகை ரொம்பவே யோசித்து வருகிறாராம். மேலும், படத்திற்கான ப்ரோமோஷனுக்காக தானே நடிகர் இப்படியொரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் என்கிற ரீதியிலும் யோசித்து பழையபடி தாராளம் காட்டுவாரா அல்லது அந்த காட்சிக்கு டூப்பை பயன்படுத்தலாமா என ஏகப்பட்ட யோசனைகளில் நடிகை மூழ்கி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X