என்னோட சிஷ்யனா நீ? சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்!

கால்பந்து விளையாட்டை மையமாக எடுத்து வரும் பிரம்மாண்டத்தின் சீஷ்யன் சிஜியில் சொதப்பியதற்காக குருவிடம் திட்டு வாங்கியுள்ளாராம்.

சென்னை: வசூல் நட்சத்திரத்தை வைத்து கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்து வரும் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

ஆனால், டிரைலரில் ரியல் செட்களில் படத்தை ஷூட் செய்யாமல் பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலை செய்யப்பட்டு இருப்பது அப்பட்டமாக பல்லிளிக்கிறது.

இதை அறிந்த பிரம்மாண்டம் தனது சிஷ்யனை கடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவும் காப்பியா?

இதுவும் காப்பியா?

பாலிவுட்டின் கான் நடிகர் ஹாக்கியை வைத்து எடுத்த படத்தின் காப்பியா இல்லையா என்ற கேள்வி மற்றும் சந்தேகமே கோலிவுட்டில் பெரிய பண்டிகைக்கு ரிலீசாகும் படத்தின் மேல் எழுந்துள்ளது. ஆனால், இது காப்பி அல்ல வேற கதை என படத்தின் தயாரிப்பாளர் போகும் இடமெல்லாம் சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக புலம்பி வருகிறார்.

சிஜி சொதப்பல்

சிஜி சொதப்பல்

பிரம்மாண்டத்தின் சிஷ்யன் என்பதால், தனது படங்களில் தொடர்ந்து சிஜி சித்து விளையாட்டுக்களை பெரும்பாலும் பாடலில் காட்டி வந்த அந்த இளம் இயக்குநர், இம்முறை பட்ஜெட்டை குறைக்கிறேன் என்கிற பேர் வழியில் விளையாட்டு மைதானத்தையும் சிஜியில் போட்டுள்ளார். ஆனால், டிரைலரிலே பல இடங்களில் பச்சை ஸ்க்ரீன் பல்லிளித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

குருவிடமிருந்து திட்டு

குருவிடமிருந்து திட்டு

என்னோட சிஷ்யனா நீ, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சிஜியில் ஆவது கான்செண்ட்ரேஷன் பண்ணியிருக்க வேண்டாமா என்று பிரம்மாண்டம் அந்த இளம் இயக்குநரை திட்டித் தீர்த்துள்ளாராம்.

சிஜி கரெக்‌ஷன்

சிஜி கரெக்‌ஷன்

பிரம்மாண்டத்திடம் இருந்து சிஷ்யப் புள்ளைக்கு திட்டு விழுந்த விஷயம் அறிந்த அந்த நடிகர், தனக்கும் அதில் உடன்பாடு இல்லை என்றும், சிஜி பணிகளில் கரெக்‌ஷன் பார்க்க சொல்லி கட்டளையிட்டுள்ளாராம். பதறிபோன இயக்குநர் கடைசி நேர ஒட்டுக்களை போட்டுக்கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X