நீ டிவி போனதெல்லாம் போதும்.. வீட்டோடு கிட.. பிக் பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த கதி.. வாழ்க்கையே போச்சே
சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஒருவருக்கு அவரின் வீட்டில் கால் கட்டு போடப்பட்டு உள்ளதாம். கால் கட்டு என்றால் கல்யாணம் இல்லை.. ஹவுஸ் அரெஸ்ட் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பல்வேறு சர்ச்சைகள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. நடந்து வரும் பிக் பாஸ் 7 சீசனில் நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

அவருக்கு எதிராக நடிகை மாயா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் வெளியேற்றப்பட்டு உள்ளார். கமல் விசாரிக்கவில்லை: கமல்ஹாசன் இதை சரியாக விசாரிக்காமல் முடிவு எடுத்துவிட்டார். அதோடு பிரதீப் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. இதில் கமல் தீர விசாரிக்கவில்லை என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.
கேங்க் மோதல்; அங்கே இருக்கும் கேங்க் திட்டமிட்டு பிரதீப்பிற்கு இருக்கும் புகழ் காரணமாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அவரை வெளியே அனுப்பிவிட்டார்களோ என்றும் கேட்க தோன்றுகிறது. இதில் மாயா, பூர்ணிமா புகார்களை தாண்டி வேறு எதோ நடந்துள்ளது. வேறு அழுத்தம் காரணமாக இவர் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் கூட பெரிதாக பிரதீப் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இன்னொரு பக்கம் நிக்சன் போன்றவர்கள் பெண்களுடன் நடந்து கொண்ட விதமும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது . வெளியே போன பெண் ஒருவரை பற்றி அவர் செய்த கமெண்டும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
விஷ்ணு: அதேபோல் கடந்த வாரம் நிக்சன் கேப்டனாக இருந்தார். இதில் விஷ்ணு நடந்து கொண்ட விதமும் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்தது. அர்ச்சனாவிடம் அவர் நடந்து கொண்ட விதம், சண்டை போட்டதும் கடுமையான விமர்சனங்களுக்கு, சர்ச்சைகளுக்கு உள்ளானது.
மேலும் தினேஷ் - மாயா சண்டை, இவர்களுக்கு கை கட்டு போட்டது போன்ற விஷயங்கள் கூட கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
பெண்ணுக்கு செக்: பிக் பாஸ் பிரபலம் ஒருவருக்கு அவரின் வீட்டில் கால் கட்டு போடப்பட்டு உள்ளதாம். கால் கட்டு என்றால் கல்யாணம் இல்லை.. ஹவுஸ் அரெஸ்ட் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதன்படி பிக் பாஸ் பிரபலம் ஒருவர்.. வீட்டிற்கு சென்றதில் இருந்தே அவருக்கு கடுமையான டோஸ் விழுந்து வருகிறதாம்.
பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் அந்த குடும்பத்தை அப்செட் ஆக்கி உள்ளதாம். அந்த போட்டியாளரின் உறவினர்கள் பலர் போன் செய்தி.. இனிமே நீ டீவி பக்கமே போக வேண்டாம். நீ பிரபலமாக முயன்றது போதும். அங்கே போய் குடும்ப மானத்தை வாங்காவிட்டாய். வெளியே இனி நீ தலைகாட்ட முடியாது.
பிக் பாஸ் வீட்டில் நீ செய்த விஷயங்கள் காரணமாக நம் குடும்பத்திற்கே சிக்கல் ஆகி உள்ளது என்று குடும்பத்தினர் லாக் வைத்து உள்ளார்களாம். அந்த போட்டியாளரின் நெருங்கிய குடும்பம் ஒன்று நேரடியாக வீட்டிற்கே வந்து அவரின் நடத்தை பற்றி டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அவர் பிரபலம் ஆவதற்கான முயற்சி இதோடு முடியும் என்கிறார்கள் அவர் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.


Click it and Unblock the Notifications











