சொகுசு பங்களா, ஆடம்பர கார்னு ஜமாய்க்கும் 'மீ டூ' நடிகை: காரணம் ஒரு பெரிய ஆள்
Recommended Video

சென்னை: மீ டூ நடிகை ஒருவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிய காரணம் இருக்கிறதாம்.
அண்டை மாநிலத்தில் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்ததால் பிரபலமானார் ஒரு நடிகை. அந்த மாநிலத்து திரையுலகினர் அவரை ஒதுக்கவே மூட்டை முடிச்சுடன் கிளம்பி சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டார்.
தமிழ் திரையுலகை சேர்ந்த சிலர் மீதும் அம்மணி பாலியல் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு
அம்மணி சென்னைக்கு வந்த பிறகு அவரின் வாழ்க்கையே மாறிவிட்டது. சொகுசு பங்களா, ஆடம்பர கார் என்று ராணி போன்று வாழ்கிறார். வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்கிறார். தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த மாற்றத்திற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் உள்ளதாம்.

பெத்த சம்பளம்
அந்த நடிகைக்கு எடுத்த எடுப்பில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கிறார்களாம். தமிழ் திரையுலகை சேர்ந்த மேலும் பலரின் லீலைகள் குறித்த விபரங்களை வெளியிடுவேன் என்ற அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. அந்த விபரங்களை எல்லாம் வெளியிடாமல் இருக்கத் தான் அவருக்கு பட வாய்ப்பு, பெத்த சம்பளமாம்.

ஆதரவு
சென்னைக்கு வந்த வேகத்தில் அவருக்கு ஒரு பெரிய இடத்து ஆதரவு கிடைத்துள்ளது. அவரின் ஆதரவில் அம்மணியின் கெரியர் சூப்பராக பிக்கப்பாகி வருகிறது. கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற நடிகையின் ஆசை இவ்வளவு சீக்கிரத்தில் அதுவம் இவ்வளவு எளிதில் நிறைவேறும் என்று அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அமைதி
சென்னைக்கு வந்த பிறகு நடிகை மீ டூ என்பதையே மறந்துவிட்டார். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











