பெரிய ஹீரோக்கள் தயவு இனி வேண்டாம்... முடிவு செய்த பறவை நடிகை!
பறவை நடிகைக்கு விவாகரத்துக்கு பின் படங்கள் குவிகின்றன. ஆனால் பெரிய நடிகர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்த கோபத்தைதான் நயன் தாராவின் அறம் படத்தை பாராட்டும்போது பகிர்ந்துகொண்டுள்ளார் என சொல்கிறார்கள். அறம் படத்தை பாராட்டி ட்விட்டரில் எழுதியவர் சந்தடி சாக்கில் பெரிய ஹீரோக்களையும் கமர்ஷியல் படங்கள் எடுப்பவர்களையும் சாடியிருந்தார். இனி முன்னணி ஹீரோக்கள் தயவு இல்லாமல், அறம் மாதிரி தனி ட்ராக்கில் போய்விடலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
நயன் அளவுக்கு முன்னணியில் இல்லையென்றாலும் அன்றாடம் செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார் பறவை.


Click it and Unblock the Notifications











