நடிகையோடு, அவரது அம்மாவையும் கவர் பண்ணும் ப்ளேபாய்!
பிரியாணி கடை நடிகர் என கோடம்பாக்கத்தில் பிரபலமாகிவிட்ட, அந்த ப்ளே பாய் நடிகர் கையால் பிரியாணி சாப்பிடாத இளம் ஹீரோயின்களே இல்லை என்றாகிவிட்டது.
தன்னோடு எந்த ஹீரோயின் நடித்தாலும், எடுத்த எடுப்பிலேயே பிரியாணி விருந்து கொடுத்து நடிகையை தன் அன்புப் பிடிக்குள் கொண்டு வந்துவிடுவாராம் இந்த 'அகோரி'.
சக நடிகர்களுக்கு இதில் ஏகத்துக்கும் பொறாமை!
சமீபத்தில் இவர் தன்னுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள, வாரிசு நடிகைக்கும் இப்படி பிரியாணி வலை விரித்துள்ளார். ஆரம்பத்தில் நடிகை பிரியாணியை ஏற்க மறுத்துவிட்டாராம். இவர்தான் கில்லாடியாச்சே... எனவே முதலில் நடிகையின் அம்மாவுக்கு பிரியாணி பார்சல் கொடுத்து கவர்செய்விட்டாராம்.
அடுத்த நாள் ஹீரோயினை பிரியாணி விருந்துக்கு அழைக்க, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் சந்தோஷமாக வந்து சாப்பிட்டுவிட்டுப் போனாராம்!
Comments


Click it and Unblock the Notifications