»   »  சொந்தப்படமே வேண்டாம் அலறும் பிரியாணி நடிகர்

சொந்தப்படமே வேண்டாம் அலறும் பிரியாணி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரித்த படங்கள் சரியாகப் போகாததால் இனிமேல் சொந்தமாக படமெடுப்பதில்லை என்ற முடிவிற்கு, பிரியாணி நடிகர் வந்திருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த பிரியாணி நடிகர் தற்போது தொடர் தோல்விகளால் தத்தளித்து வருகிறார். அதனால் மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்து பார்முக்கு வரும் முயற்சிகளில் தற்போது இறங்கியிருக்கிறார்.

Biryani Actor's New Decision

இதற்காக தனது அழகான தோற்றத்தைக் கைவிட்டு கட்டுமஸ்தாக உடலை ஏற்றி வைத்திருக்கிறார். களவாணி நடிகருக்கு வெற்றிகொடுத்த இயக்குநர் தான் இப்படத்தை எடுக்கவிருக்கிறார்.

அதனால் சூப்பரான நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறது.இந்நிலையில் நடிகரை வைத்து படமெடுக்க வந்த இயக்குநர்கள் நீங்களே தயாரிக்கலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கின்றனர்.

ஆனால் ஏற்கனவே சொந்தமாக தயாரித்த 2 படங்களும் தோல்வியைத் தழுவியதால், இனிமேல் சொந்தப்படமெடுக்கும் எண்ணமில்லை என்று நடிகர் கறாராக சொல்லி விட்டாராம்.

மேலும் இனிமேல் நடிப்பை மட்டும் பார்த்தால் போதும் என்ற முடிவிற்கு நடிகர் வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

English summary
Biryani Actor take a New Decision Regarding Own Production Movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos