»   »  படமா ஆளை விடுங்க..கோலி சோடாவைக் கழற்றி விட்ட பாடி பில்டர்

படமா ஆளை விடுங்க..கோலி சோடாவைக் கழற்றி விட்ட பாடி பில்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணான அந்த படத்திற்குப் பின்னர் சாமி நடிகரின் நடிப்பில் வெளியான நம்பர் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறத் தவறி விட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் சொன்ன கதை நடிகருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம், அதனால் நாம சேர்ந்து இன்னொரு படம் பண்ணலாம் என்று இயக்குனரிடம் நாயகன் நம்பிக்கை அளித்திருந்தாராம்.

ஆனால் படம் சொதப்பியதில் நடிகர் மிகவும் நொந்து போய்விட்டாராம். இதில் இவருடன் மோதிய அந்த நடிகையின் படம் வேறு நல்ல வசூலை அள்ளியது.

படம் சொதப்பியதைவிட நம்பர் நடிகையின் படம் வெற்றி பெற்றதுதான் நாயகனை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டதாம். இந்நிலையில் நாயகன் அளித்த கோரிக்கையின் பேரில் இயக்குநர் நேரில் சென்று நடிகரை சந்தித்திருக்கிறார்.

ஏற்கனவே வருத்தத்தில் இருந்த நடிகர் இயக்குனரிடம் ஒழுங்காக பேசக் கூடவில்லையாம். மேலும் தற்போது வெளியான படத்தின் வரவேற்பைக் கண்டு இயக்குனருக்கு கால்ஷீட் கொடுக்கவும் தயங்குகிறாராம்.

ஏற்கனவே படம் ஓடவில்லை, இதில் நடிகரின் தயக்கமும் சேர்ந்து கொள்ள தற்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் அந்த சோடா இயக்குநர்.

English summary
Body Builder Actor Recent Movie not Getting a Good Response in Peoples. Now the Actor is Hesitant to Give the Call Sheet for Soda Director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil