அப்படி நடிக்க மட்டும் தான் கூப்பிடுறாங்க.. மத்தபடி கண்டுக்க மாட்றாங்க.. புலம்பும் பிரபல நடிகை!

By Staff

சென்னை: போல்டான கதாபாத்திரங்கள் மற்றும் ஆடையை துறந்து நடிக்க வேண்டும் என்றால் மட்டுமே தன்னை இயக்குநர்கள் அணுகுவதாகவும் மற்றபடி கண்டுக்கவே மாட்றாங்க என்றும் பிரபல நடிகை ஒருவர் புலம்பி தள்ளி இருக்கிறார்.

நல்ல நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வந்தாலும், அது யாருடைய கண்களுக்கும் தெரியவே மாட்டேங்குதே என்கிற ஏக்கமும் நடிகையை போட்டு வாட்டி வதைத்து வருகிறது.

பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் இளம் நடிகைகளுக்கு கிடைக்கும் முன்னணி நடிகை அந்தஸ்த்து தனக்கு ஒரு போதும் கிடைக்கவே இல்லை என்றும் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

போல்டா நடிக்க

போல்டா நடிக்க

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் போல்டான கதாபாத்திரங்கள் நடிகைகளுக்காக மிக சில இயக்குநர்களால் எழுதப்படுகிறது. அப்படி ஏதாவது கதை ரெடியானால் உடனே அந்த நடிகையை புக் பண்ணுங்கப்பா என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இந்த பிரபல நடிகையை தேர்வு செய்கின்றனர்.

உடனே ஓகே

உடனே ஓகே

எப்போதாவது தான் தனக்கு வாய்ப்புகளே வருகிறது அதிலும் போல்டாக நடிக்க வேண்டுமென்றால் டபுள் ஓகே சொல்லி நடித்து வந்த அந்த நடிகைக்கு தற்போது அதுவே பிரச்சனையாக மாறி இருக்கிறது. அது போன்ற படங்கள் வராமல் ரொமான்ஸ் கதைகள் வந்தால் நடிகையை யாருமே சீண்டுவதில்லையாம்.

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக

டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதன் காரணமாகவே அந்த பிரபல நடிகைக்கு கிடைக்காமலே போய் வருகிறது. ஒரு சில படங்கள் தப்பித் தவறி கிடைத்தாலும், வில்லியாகவும், தோழியாகவும் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே வந்து செல்லும் நிலை தான். ஜோடியாகும் வாய்ப்புகள் கிடைப்பதே இல்லை என்பதால் நடிகை கடும் மனவேதனைக்கு தள்ளப் பட்டு இருக்கிறார்.

ஓவர் டேக்

ஓவர் டேக்

இவருக்கு அடுத்து இண்டஸ்ட்ரிக்கு வந்த இளம் நடிகைகள் பலரும் முன்னணி ஹீரோயின்களாக மாறி இவரை ஓவர் டேக் செய்து வருகின்றனர். அவ்வப் போது படங்கள் வந்தாலும், தொடர்ந்து ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் அவரது மனதை ரொம்பவே உறுத்திக் கொண்டு இருக்கிறது.

சோலோ ஹீரோயின்

சோலோ ஹீரோயின்

மற்ற டாப் நடிகைகள் சரிவை சந்திக்கும் போது உமன் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து சோலோ ஹீரோயினாக நடித்து விடுகின்றனர். ஆனால், இவர் விஷயத்தில் அப்படி கூட தனியாக இவரை நாயகியாக வைத்து படத்தை உருவாக்க இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன் வர மிகவும் தயங்கி வருகின்றனர்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

போல்டாக மட்டுமின்றி ஆடையின்றி நிர்வாண கோலத்தில் நடிக்க வேண்டும் என்றால் கூட முதல் அழைப்பு இந்த நடிகைக்கு மட்டும் தான் வருகிறது. அந்த அளவுக்கு இண்டஸ்ட்ரியில் இவருக்கு அப்படியொரு முத்திரை குத்தப்பட்டு இருப்பதே பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு பறிபோக காரணம் என்று கூறுகின்றனர்.

ஏமாந்து போகிறார்

ஏமாந்து போகிறார்

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு படத்தில் ஹிட் கொடுத்து விட்டு அடுத்த பெரிய படம் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருக்க யாருமே தன்னை சீண்டாமல் மற்ற ஹீரோயின்களை புக் செய்து வருவதால் மிகவும் ஏமாந்து போயிருக்கிறார். விரைவில் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள அந்த பேய் படம் மட்டும் வெற்றிப் பெற்றால் அதன் பின்னராவது நிலைமை மாறுமா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X