ஒரே ஹோட்டலில் முன்னாள் கணவருடன் போல்ட் நடிகை.. இரண்டாம் கணவர் பிரச்சனை வேற. என்ன ஆகப் போகுதோ?

By Staff

சென்னை: அந்த போல்ட் நடிகை மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரை வைத்து படம் இயக்கி அறிமுகமான இயக்குநர் மீண்டும் நடிகையை சந்தித்து கதை சொல்ல, ஓகே சொல்லி உள்ளார்.

காதல் படமாக உருவாக உள்ள அந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை படக்குழுவுடன் வெளிநாடுக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கே அவருக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வில்லங்கமான படங்கள்

வில்லங்கமான படங்கள்

போல்ட் நடிகை என பெயர் வாங்கும் அளவுக்கு அந்த மாதிரி படங்களை தேர்வு செய்தே அந்த நடிகை சினிமாவில் அடியெடுத்து வைத்தது முதல் தற்போது வரை நடித்து வருகிறார். படு கவர்ச்சியாக போட்டோஷூட்களை நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வரும் அந்த நடிகை ஏகப்பட்ட பர்ட்டி போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

நடிகை விவாகரத்து

நடிகை விவாகரத்து

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து வந்த அந்த நடிகையை காதலித்து அந்த பிரபலம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகைக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் திடீரென பிரிந்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரிய ஷாக் கொடுத்தனர். நடிகைக்கு படங்கள் கிடைக்கக் கூடாத அளவுக்கும் சில வேலைகளை முன்னாள் கணவர் செய்தார் என தகவல்கள் வெளியாகின.

ஸ்ட்ராங் கம்பேக்

ஸ்ட்ராங் கம்பேக்

ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த அந்த நடிகை மீண்டும் சினிமாவுக்கு ஸ்ட்ராங் கம்பேக் கொடுத்துள்ளார். நடிகையின் வரவால் சந்தோஷமடைந்த அந்த மார்க்கெட் இழந்த இயக்குநர் மறுபடியும் இவரை வைத்து ஒரு படத்தை பண்ணிவிடலாம் என கொக்கிப் போட கொக்கும் சிக்கி விட்டது.

ஒரே ஹோட்டலில்

ஒரே ஹோட்டலில்

இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற இடத்தில் தனது முன்னாள் கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்க வேண்டிய சூழல் தற்போது நடிகைக்கு உருவாகி தர்ம சங்கடமாக மாறிவிட்டதாம். ஏகப்பட்ட பிரச்சனைகளில் இருக்கும் நடிகை மீண்டும் எக்ஸ் கணவருடன் ஒன்றாக சேர்ந்து விடுவாரா? என்றும் கேள்விகள் கிளம்பி வருகின்றன.

இரண்டாவது கணவர் பிரச்சனை

இரண்டாவது கணவர் பிரச்சனை

ஷூட்டிங் போன இடத்தில் முன்னாள் கணவர் உடன் அப்படியொரு பிரச்சனை என்றால், ரகசியமாக நடிகை தன்னை திருமணம் செய்து கொண்டார் என நடிகையின் நண்பர் பகீர் கிளப்பும் ஆதாரங்களை வெளியிட்டு நடிகைக்கு மேலும், சிக்கலை கொடுத்துள்ளார். இதனால், நடிகையின் நிலைமை மேலும், படுமோசம் அடைந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

என்ன செய்யப் போகிறார்

என்ன செய்யப் போகிறார்

இப்படி இரண்டு பக்கமும் நடிகைக்கு பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், தேவையில்லாத சில கடன் பிரச்சனைகளும் அவரை போட்டு வாட்டுகிறதாம். இவற்றில் இருந்து தப்பிக்க நடிகை என்ன முடிவு செய்யப் போகிறார் என்கிற கேள்விகளும், மறுபடியும் அனைத்து பிரச்சனைகளையும் முடித்து விட்டு ஸ்டராங் கம்பேக் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X