ஆடித் தள்ளுபடி.. ஓடாத படத்தை விற்க அந்த போல்ட் நடிகை வேற என்னலாம் செஞ்சிருக்காங்க தெரியுமா?
சென்னை: தியேட்டரில் வெளியானால் முதல் காட்சிக்கே மூணு பேர் தான் வந்து பார்ப்பான் என படத்தை பார்த்த அந்த பெரிய நிறுவனம் சொல்ல, அந்த நிறுவனத்திடம் எப்படியாவது அடிமாட்டு விலைக்காவது படத்தை விற்க ஆடித் தள்ளுபடி ஆஃபர் எல்லாம் அந்த போல்ட் நடிகை கொடுத்து இருக்காங்களாம்.
அந்த இயக்குநரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை, வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், தனக்கான வாய்ப்பை தானே உருவாக்கி ஒரு படத்தில் நடித்துள்ளார்.
எப்படியாவது அந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்து விட வேண்டும் என நினைத்த அவரது கனவை இயக்குநர் தவிடு பொடியாக்கி விட்டார்.

அவுட்புட்டால் அப்செட்
ஏகத்துக்கும் பில்டப் செய்து நடிகையின் பணத்தில் எப்படி படம் இயக்கலாம் என்கிற பாடத்தை அந்த இயக்குநர் கற்றுக் கொண்டார் என்று தான் கோடம்பாக்கம் முழுக்க பேச்சுக்களாக எதிரொலிக்கின்றன. முழு நம்பிக்கையுடன் சொந்த பணத்தை போட்ட நடிகைக்கு கடைசியில் பெரிய நாமத்தை இயக்குநர் போட்டு விட்டாராம். ஃபைனல் அவுட்புட்டை பார்த்து இயக்குநரிடம் சண்டைக்கே சென்று விட்டாராம் அந்த நடிகை.

அடிமாட்டு விலைக்கு
படத்தை தியேட்டரில் வெளியிட முடியாது என்பதை அறிந்து கொண்ட நடிகை எப்படியாவது ஓடிடியில் பெரிய தொகைக்கு விற்று விடலாம் என பார்த்த நிலையில், அடிமாட்டு விலைக்கு கூட அந்த படத்தை எடுத்துக் கொள்ள அந்த பெரிய நிறுவனம் தயக்கம் காட்டியதாம். ஆனால், நடிகையின் கெஞ்சலுக்காக வேறு ஒரு ஆப்ஷனை கொடுக்க நடிகையும் அதற்கு ஓகே சொல்லி உள்ளதாக கூறுகின்றனர்.

ஆடி ஆஃபர்
ஆடித் தள்ளுபடி போல ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்கிற ரீதியில், நடிகை நடித்து பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் அந்த தேறாத படத்தையும் அந்த பெரிய நிறுவனத்திடம் ஒரு ரேட் பேசி இரண்டு படத்தையும் விற்றுத் தள்ளி இருப்பதாக கூறுகின்றனர். மேலும், சில ஆஃபர்களையும் நடிகை அள்ளி வீச ஹேப்பியான நிறுவனம் அவரது படங்களை வெளியிட ஓகே சொல்லி விட்டது என்கிற பேச்சு புயலாக கிளம்பி உள்ளது.

நிலைமை இப்படி ஆகிடுச்சே
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்கிற ரீதியில் நடிகை தனது நிலைமை இப்படி ஆகிடுச்சே என்கிற கவலை ஒரு பக்கம் இருந்தாலும், மீண்டும் கோலிவுட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை விட்டு விடாமல், மறுபடியும் தனது இடத்தை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதை பார்த்து அவரது ரசிகர்கள் நடிகைக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

அதுக்கு வருவாரா
அந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவுக்கும் நடிகையை அப்படியே அழைத்துக் கொள்ளலாம் என பெரிய நிறுவனம் அணுகி வருவதாகவும், நடிகையும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கான ரசிகர்கள் மேலும் அதிகரிப்பார்கள் என யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே நடிகையின் இறுதியான முடிவு தெரிந்து விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











