எல்லாம் முடிஞ்சு போச்சு.. கழட்டி விட்ட காதலர்.. நடிகை திடீரென கடுப்பாக காரணமே அதுதானாம்!
சென்னை: ரகசியமாக அந்த நடிகருடன் காதல் செய்து வந்த அந்த பிரபல நடிகை திடீரென காதல் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா இருங்க என கடுப்படித்து இருக்கும் நிலையில், அவருக்கும் அந்த நடிகருக்கும் இடையே பிரேக்கப் ஆகி விட்டது தான் காரணம் என பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.
பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வரும் அந்த நடிகை சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நிலையில், இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதிகமாக காதல் கிசுகிசுக்களில் கூட தனது பெயரை அடிபடாமல் பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் நடிகருடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் லீக் ஆகி அவரது காதல் கதை காட்டுத்தீ போல பரவியது.

பால் மேனி
16 வயதில் நடிக்க வந்த அந்த பால் மேனி நடிகை இப்போ பார்த்தாலும் இளம் பெண்ணாகவே அதே அழகுடன் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். முன்னணி நடிகையாக வர பல ஆண்டுகளாக போராடியும் எந்தவொரு மொழியிலும் அவரால் முன்னுக்கு வர முடியாமல் இருந்து வந்த நிலையில், சமீப காலமாக டாப் ஹீரோயினாக மாறி அட்டகாசம் செய்து வருகிறார்.

நடிப்பே வராது
முன்னணி ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும், நடிப்பே வராத நிலையில், கொலு பொம்மையாக பாடல்களில் மட்டும் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு செல்வதையே தொழிலாக கொண்டு பல ஆண்டுகள் சினிமா துறையில் கடத்தி விட்டார் அந்த நடிகை. சில இயக்குநர்கள் அந்த நடிகையிடம் இருக்கும் திறமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த நிலையில், தற்போது கூட லீடிங் ஹீரோயினாக கெத்துக் காட்டி வருகிறார்.

நடிகருடன் நெருக்கம்
இந்தி நடிகருடன் திடீரென அந்த நடிகை படு நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று தீயாக பரவிய நிலையில் தான் அந்த நடிகரை நடிகை காதலித்து வருகிறாரா என்கிற கேள்விகள் கிளம்பின. சில மாதங்களாக சத்தம் காட்டாமல் சந்தோஷப்பட்டு வந்து நடிகை திடீரென அந்தர் பல்டி அடித்து நாங்க லவ் பண்ணவே இல்லை என தடாலடியாக பேசியிருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

பிரேக்கப்
நடிகருடன் ரொம்பவே நெருக்கமாக பழகி வந்த அந்த நடிகையை சமீபத்தில் அந்த நடிகர் கழட்டி விட்டு விட்டதாகவும் இதுவரை அமைதி காத்து வந்த நடிகை திடீரென ஆவேசமாக காரணமே இதுதான் என்றும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் தீயாக கொழுந்து விட்டு எரிகிறது.

எல்லாம் ஓவர்
இதுவரை கூட இணைந்து நடித்த எந்தவொரு நடிகரும் நடிகையை கண்டுக்க கூட இல்லாத நிலையில், அந்த நடிகர் அக்கறை செலுத்தியதும் இந்த ஆண்டுக்குள் திருமணத்தையே முடித்து விடலாம் என நினைத்திருந்த நடிகை திடீரென நடிகர் கழட்டி விட்டு சென்ற நிலையில், ரொம்பவே மன வருத்ததில் ஆழ்ந்து இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஏற்கனவே ஒரு முறை
பிரைட் நடிகரின் தம்பி உடன் இணைந்து காதல் ஆட்டம் போட்டு வந்த அந்த நடிகை தம்பி நடிகருடன் ரொமான்ஸ் செய்து வந்த நிலையில், பெற்றோர்களால் அந்த காதல் பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு காதல் தோல்வியை நடிகை சந்திக்க நேரிட்டது பெரும் துயரத்தை நடிகைக்கு கொடுத்திருப்பதாக புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











