நீங்க தான் காப்பாத்தணும்.. திடீரென அந்த இயக்குநருக்கு போன் போட்ட பாலிவுட் பிரபலம்.. நடக்குமா?

By Staff

ஹைதராபாத்: பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு அதிகம் வளர்ந்து விட்டதால் தலையே தூக்க முடியாத நிலையில், முன்னணி நடிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

சமீபத்தில் வெளியான அந்த படத்திற்காக அந்த இயக்குநர் வரை அழைத்து புரமோஷன் செய்த நிலையிலும், நடிகரின் படம் கல்லா கட்டவில்லை.

இந்நிலையில், அதிரடியாக இயக்குநர் தான் உதவ வேண்டும் என அந்த பிரபல பாலிவுட் நடிகரே போன் போட்டு கெஞ்சி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூழ்கும் கப்பல்

மூழ்கும் கப்பல்

அந்தோ பரிதாப நிலைக்கு பாலிவுட் டைட்டானிக் போலா மூழ்கும் கப்பலாக மாறி விட்டது. இந்திய சினிமாவின் மார்கெட்டே இதனால் ஆட்டம் கண்டு போய் விடும் என்பதை உணர்ந்த அந்த பாலிவுட் நடிகர் இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என சக நடிகர்களின் உதவியை நாடி உள்ளார்.

உதவிக்கு வந்தாலும் உதை

உதவிக்கு வந்தாலும் உதை

ஆனால், எந்தவொரு முன்னணி நடிகர் அந்த நடிகருக்கு உதவி செய்ய வந்தாலும் எதிர்க்கும் கூட்டம் அவர்களுக்கும் சேர்த்து ஆப்படிக்கும் மன நிலையில் இருப்பதால், முதலுக்கே மோசம் ஆகிவிட்டது. இந்நிலையில், வேறு வழியே தெரியாத அந்த நடிகர் ஒட்டுமொத்தமாக சரண்டர் ஆகி விட்டார்.

இயக்குநருக்கு திடீர் போன்

இயக்குநருக்கு திடீர் போன்

தென்னிந்தியாவில் கொடி கட்டிப் பறக்கும் அந்த இயக்குநருக்கு திடீரென போன் போட்டு பேசியிருக்கிறார் அந்த பிரபல நடிகர். ஒரு காலத்தில் அந்த இயக்குநருக்கே சவால் விட்டு கலெக்‌ஷன் அள்ளிய நடிகருக்கே இப்படியொரு நிலைமை ஏற்பட்டு விட்டதே, என நினைத்த இயக்குநர் சொல்லுங்க நான் என்ன செய்யணும் என கேட்டுள்ளார்.

நீங்க தான் காப்பாத்தணும்

நீங்க தான் காப்பாத்தணும்

நிலைமை நாளுக்கு நாள் ரொம்பவே மோசமாகி வருகிறது. நீங்கள் தான் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும். நாம் இருவரும் இணைந்து நமது கனவு படமான அந்த பிரம்மாண்ட படத்தை உருவாக்கினால் தான் ரசிகர்களின் மனம் மாறும் இந்த எதிர்ப்பு அலையை அடக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், உடனடியாக அதற்கான வேலைகளை செய்யலாம் வாங்க என அழைப்பு விடுத்துள்ளாராம்.

இயக்குநர் யோசனை

இயக்குநர் யோசனை

பெரிய நடிகர் அழைத்து உள்ள நிலையில், மறுக்கவும் முடியாமல் உடனடியாக ஓகேவும் சொல்ல முடியாத நிலையில், அந்த இயக்குநர் சரி நேரில் வருகிறேன் பேசுவோம் என்று சொல்லி இருக்கிறாராம். இயக்குநர் அந்த நடிகருடன் இணைந்து படம் பண்ண ஒப்புக் கொள்வாரா? இல்லையா? என்பது கூடிய விரைவிலேயே தெரிந்து விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X