கணவனை கழட்டிவிட்டு வில்லன் நடிகருடன் டேட்டிங்.. வசமாக சிக்கிய மனைவி!
சென்னை: பாலிவுட்டில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து மாஸ் நடிகர் என பெயர் எடுத்துள்ள இவர், சினிமா பின் புலமே இல்லாத பெண்னை தேடி பிடித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது தான் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று ஒரு பெண்னை தேடி பிடித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த பெண்னோ ஷூட்டிங் பார்க்க வந்த இடத்தில் வில்லன் நடிகரின் அழகில் மயங்கி அவருடன் ஊர் சுற்றி வருவதாக பாலிவுட்டில் செய்தி பரவி வருகிறது.
பாலிவுட்டில் மாஸ் நடிகரான இவர் தற்போது ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். வீட்டில் இருந்து கடுப்பானதால், படப்பிடிப்புக்கு சமைத்து எடுத்து வருவதாக கூற, பாலிவுட் ஹீரோ நடிகரோ, அதற்கு ஒகே சொல்லிவிட்டார். இதனால், ஹீரோ நடிகரின் மனைவி அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். அப்போது தான் ஹீரோ நடிகர் தனது மனைவியை வில்லன் நடிகருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஹீரோவின் மனைவி என்பதால், அங்கிருந்தவர்களும் அவருடன் நன்றாக பேசி உள்ளார்.

வில்லன் நடிகருடன் காதல்: ஹீரோவின் மனைவி படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வாடிக்கையானதால், வில்லன் நடிகர், ஹீரோ நடிகரின் மனைவியுடன் நெருக்கமாக பழக தொடங்கி உள்ளார். இதை ஹீரோவும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. சாதாரணமாகத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்தார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல், இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதை கண்டுபிடித்த ஹீரோ நடிகர், மனைவியை படப்பிடிக்கு வரக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால்,கடுப்பான மனைவி வில்லன் நடிகருக்கு போன் போட்டு கதற, நான் இருக்கிறேன் என்று ஆறுதலாக பேசி உள்ளார்.
நான்கு மாதம் கர்ப்பம்: படப்பிடிப்புக்கத்தானே வரக்கூடாது வாங்க ஜாலியாக டேட்டிங் போகலாம் என்று இருவரும் சேர்ந்து, ஹீரோ நடிகருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஊர் சுற்ற தொடங்கிவிட்டனர். பலமுறை சந்தித்து, தங்களது காதலை ஆழமாக இருவரும் பரிமாறிக்கொண்ட நிலையில், தற்போது ஹீரோவின் மனைவி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எதுவுமே தெரியாமல் ஹீரோ நடிகர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பாலிவுட் மாஸ் ஹீரோ என பெயர் எடுத்த இவர் பின்னால் அத்தனை இளம் பெண்களும் காதல் பார்வை வீசி வரும் நிலையில், மனைவி வில்லன் நடிகர் மீது ஆசைப்பட்டது குறித்து பாலிவுட் வட்டாரத்தில் படுமோசமாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











