திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டும் பாலிவுட் நடிகை.. அட்டை போல கூடவே இருக்கும் ஹீரோயின்!
சென்னை: பாலிவுட் நடிகை திருமணமான நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருவதால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூத்த நடிகரின் மகனான அந்த வாரிசு நடிகர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை என்றாலும், கடுமையாக முயற்சி செய்து, தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இன்று முன்னணி நடிகர் அந்தஸ்தை பிடித்து கொண்டாடி வருகிறார்.

பிரம்மாண்டமான படம்: வாரிசு நடிகரான இவருடன் இணைந்து நடித்த நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். முன்னணி நடிகர் என பெயர் எடுத்த இவர் தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் மூலம் இந்த வாரிசு நடிகர் உலகம் முழுவதும் மெர்சல் காட்ட உள்ளார்.
கிசுகிசு: சினிமாவிற்கு வந்து இத்தனை ஆண்டுகளில் எந்தவித சர்ச்சையிலும் சிக்காத இந்த வாரிசு நடிகருடன் அந்த பாலிவுட் நடிகை நெருக்கம் காட்டி வருவதாகவும், அவர் எந்த இடத்திற்கு போனாலும், அந்த பாலிவுட் நடிகையும் சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் பாலிவுட் நடிகை, அந்த வாரிசு நடிகருக்கு பணிவிடை செய்து வருகிறாராம். இதை கவனித்த படக்குழுவினர் இருவர் குறித்தும் கிசுகிசுக்க தொடங்கி உள்ளனர்.
நெருக்கம் காட்டும் நடிகை: இதுநாள் வரை சர்ச்சையில் சிக்காமல் இருந்த இந்த நடிகருக்கு இதுபெரும் தலைவலியாக மாறிஉள்ளது. இந்த கிசுகிசு விவகாரம், அவரது மனைவி காதுக்கு செல்ல, அவரது குடும்பத்திலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு நடிகரோ பாலிவுட் நடிகையை அழைத்து,கிசுகிசு குறித்து சொன்ன பிறகும், அதைப்பற்றி கவலைப்படாத அந்த பாலிவுட் நடிகை தொடர்ந்து, திருமணமான நடிகருடன் நெருக்கம் காட்டியே வருகிறார்.
பதற்றத்தில் வாரிசு நடிகர்: இதனால், டென்ஷனான வாரிசு நடிகர் இந்த படம் எப்போதும் முடியும் என்றும், இந்த விவகாரம் அப்பாவின் காதுக்கு சென்றால் என்னவாகும் என்கிற பதற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வாரிசு நடிகர் இதற்கு மேலும் சுதாகரித்துக் கொள்ளவில்லை என்றால், இத்தனை நாள் சேர்த்துவைத்த மொத்த பெயரும் கேட்டுவிடும் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











