அது மட்டும் வேண்டாமே! கெஞ்சிய மாமனார்.. கண்டுகொள்ளாத மருமகள் நடிகை.. குடும்பத்தில் வெடித்த கிளாமர் பஞ்சாயத்து

By Staff

சென்னை: வாரிசு நடிகரைத் திருமணம் செய்துகொண்டு, சினிமாவில் 'டாப்' நடிகையாக வலம் வரும் அந்தப் பாலிவுட் வாரிசு நடிகைக்கும், அவரது மாமனார் குடும்பத்திற்கும் இடையே இப்போது பெரிய குடும்பப் பஞ்சாயத்தே ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

திருமணத்திற்குப் பிறகும் அம்மணிக்குத் திரையில் மார்க்கெட் குறையவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். ஆனால், சமீபகாலமாக நடிகை நடிக்கும் படங்களில் கவர்ச்சியின் அளவு கொஞ்சம் தூக்கலாகவே இருந்து வருகிறதாம். "திருமணத்திற்குப் பிறகு இப்படி எல்லை மீறி நடிக்க வேண்டுமா?" என்று நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் வழக்கம் போலக் குசுகுசுக்கத் தொடங்கிவிட்டனர்.

குடும்ப மானமே போகுதுப்பா - புலம்பிய மாமனார்: நெட்டிசன்களின் கமெண்ட்டுகள் ஒருபுறம் இருக்க, திரைத்துறையிலேயே பெரும் புள்ளியாகவும், பல்துறை வித்தகராகவும் இருக்கும் அந்த நடிகையின் மாமனார், இந்த விவகாரத்தால் செம்ம அப்செட்டில் இருக்கிறாராம்.

சமீபத்தில் நடிகை கமிட் ஆகியிருக்கும் ஒரு புதிய படத்தில், கதையே தேவையில்லாத அளவுக்குக் கடுமையான கிளாமர் காட்சிகளும், சில நெருக்கமான காட்சிகளும் இருப்பதாக மாமனாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே மருமகளை நேரில் கூப்பிட்டு, "நம்ம குடும்பப் பின்னணிக்கு இதெல்லாம் செட் ஆகாதுமா, தயவுசெஞ்சு அந்த மாதிரி சீன்ல மட்டும் நடிக்காதே... வேணும்னா அந்தப் படத்துல இருந்தே விலகிடு" என்று மிகவும் பக்குவமாக வேண்டுகோள் வைத்தாராம்.

Bollywood Actress Reportedly Rejects Father-in-Law s Plea Over Glamorous Role

என் கரியர்.. என் இஷ்டம் - நோ சொன்ன மருமகள்: ஆனால், மாமனார் சொன்னதைக் கேட்டு மருமகள் நடிகை கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளவே இல்லையாம். "சினிமாவில் இதெல்லாம் சாதாரண விஷயம். கேரியரில் டாப்-ல இருக்கும்போது இதையெல்லாம் தவிர்க்க முடியாது" என்று கறாராகப் பேசிவிட்டு, மாமனாரின் பேச்சை அடியோடு புறந்தள்ளிவிட்டு அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளக் கிளம்பிவிட்டாராம்.

பிரஷர்: தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கொடுக்கும் பிரஷர் காரணமாகவே நடிகை இப்படி அடம் பிடிக்கிறார் என்று ஒரு தரப்பு கூறினாலும், மாமனார் பேச்சையே மதிக்காமல் மருமகள் தன் இஷ்டத்திற்குப் பறப்பதுதான் இப்போது அந்தப் பெரிய குடும்பத்திற்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "மாமனார் சொன்னதுல என்ன தப்பு இருக்கு?" என்று திரையுலகில் ஒரு தரப்பும், "நடிப்பதும் நடிக்காததும் அவங்க தனிப்பட்ட உரிமை, இதில் குடும்பம் தலையிடக் கூடாது" என்று நெட்டிசன்கள் ஒரு தரப்பும் இந்த விவகாரத்தை வைத்து இணையத்தில் பயங்கர பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X