நெருக்கமான காட்சி.. நாற்காலி உடையும் அளவுக்கு நடிகரும் நடிகையும் சேர்ந்து.. இயக்குநர் ஷாக்!
மும்பை: இந்த கூத்து நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நடிகை இப்போதும் இந்திய அளவில் பேசப்படுகிற பாராட்டப்படுகிற நடிகையாக உள்ளார். ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நாற்காலியில் அமர்ந்துள்ள நடிகரின் மீது அமர்ந்து, நெருக்கமாக நடிக்க வேண்டும், அந்த காட்சியில் நடிகையும் நடிகரும் சேர்ந்து கொஞ்சம் ஓவராகவே நடித்ததால் நாற்காலியே உடைந்துள்ளது.
இந்த நடிகை இன்றைக்கும் பாலிவுட்டில் கொண்டாடப்படுகிற நடிகையாக உள்ளார். மூத்த நடிகையாக உள்ள இந்த நடிகை பருவத்தில் செம தைரியமான நடிகையாகவே வலம் வந்துள்ளார். அதாவது தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமா அல்லது தானா என ஒரு கை பார்த்துவிடுவார் அந்த நடிகை. இப்படியான அவருக்கு விலை மாதுவாக நடிக்க வேண்டி ஒரு இயக்குநர் வந்து கதை சொல்லி உள்ளார்.
நடிகையும் கதையை கேட்டுவிட்டு, அந்த படத்தில் நடிக்க கமிட்டும் ஆகியுள்ளார். ஆனால் நடிகையின் நடிப்பு குறித்து அந்த இயக்குநருக்கு அந்த அளவுக்கு தெரிந்திருக்கவில்லை. அதாவது, நடிகையின் படங்களைத்தான் பார்த்துள்ளாரே தவிர அவர் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு காட்சிக்காக எந்த அளவுக்கு மெனக்கெடுவார் என்பது குறித்து அவருக்கு முழுவதுமாக தெரியவில்லை. விலைமாது கதாபாத்திரத்தில் நடிகை நடித்த காட்சிகளும், அவரே இயக்குநருக்கு கொடுத்த ஐடியாக்களும் பார்த்து மொத்த படக்குழுவுமே பிரமித்துப்போனதாம். இதனால் படுக்கை அறைக் காட்சிகள் மொத்தமாக மூன்று காட்சிகள்தான் இயக்குநர் யோசித்து வைத்துள்ளார்.

உடைந்த நாற்காலி: ஆனால் நடிகையோ, இன்னும் சில காட்சிகளை சேர்க்கலாம், இது போன்ற கதாபாத்திரம் மீண்டும் எனக்கு அமையாது. அப்படி அமைந்தாலும் நான் நடிக்க மாட்டேன். இந்த படத்தின் மூலம் விலை மாதுவாக உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் கூடுமானவரை சொல்லிவிட வேண்டும் என உறுதியாக கூறியுள்ளார். இப்படியான நிலையில், ஒரு நெருக்கமான காட்சியில், நாற்காலியில் அமர்ந்துள்ள நடிகரின் மேலே ஏறி, அவருடன் உடலுறவில் ஈடுபடுவது போல நடிக்க வேண்டும். நடிகை நாற்காலி மீது ஏறி, நடிகர் மீது அமர்ந்து நடித்துக் கொண்டிருந்த போது, நாற்காலி உடைந்துவிட்டது.
அதிர்ந்த இயக்குநர்: நாற்காலி உடைந்து கீழே விழுந்த பின்னரும் நடிகை தான் நடித்துக் கொண்டிருந்த காட்சியை நிறுத்தாமல், அப்படியே நடித்துக் கொண்டு இருந்தார். இயக்குநருக்கும் கட் சொல்ல வாய் வராமல் நடிகையின் நடிப்பை பார்த்து மிரண்டு போய் விட்டார். அதன் பின்னர் அருகில் இருந்த உதவி இயக்குநர்கள் இயக்குநரிடம் சொல்லி, கட் சொல்ல வைத்துள்ளார்கள். காட்சி முடிந்த பின்னர் பார்த்தால் நடிகைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
நடிகை கேட்ட ஒரு கேள்வி: ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத நடிகை, காட்சி சரியாக வந்துள்ளதா? அல்லது மீண்டும் நடிக்க வேண்டுமா எனக் கேட்டுள்ளார். மீண்டும் நடிக்க வேண்டும் என்றால், ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த காட்சியை மீண்டும் படமாக்கலாம், அதற்குள் காலில் ஏற்பட்ட காயம் ஓரளவுக்கு சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட இயக்குநரோ அதிர்ச்சியில் உறைந்தே விட்டாராம். கடைசியில் இந்த படத்தின் போஸ்டராக நாற்காலி காட்சிதான் இடம் பெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


Click it and Unblock the Notifications











