பாலிவுட்டில் அடுத்த டைவர்ஸ் ரெடியா? நடிகரோடு நடிகை இருக்கும் பிரைவேட் வீடியோ சிக்கிடுச்சாம்
சென்னை: இந்த நடிகர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணமும் ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் நடிகர் கடந்த சில படங்களாக தென்னிந்திய நடிகைகளுடன் தான் அடுத்தடுத்து கமிட் ஆகி வருகிறாராம். இதுவே பாலிவுட்டில் கிசுகிசுக்களை உருவாக்கியது. அதாவது பாலிவுட் நடிகைகள் இவருடன் இணைந்து நடிக்க விரும்பவில்லை போல அதான் நடிகர் தென்னிந்திய நடிகைகளை தனது படத்தில் கமிட் செய்து வருகிறாராம். மேலும் இவருடன் இணைந்து நடிக்காமல் இருப்பதற்கு சில சில்மிஷ காரணங்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்கள்.
இப்படி இருக்கையில் நடிகர் கடைசியாக இணைந்து நடித்த தென்னிந்திய நடிகைக்கும் அவருக்கும் ஓவர் நெருக்கம் வந்துவிட்டது போல, அதாவது நடிகர் தன்னுடன் நடிகையை படப்பிடிப்பு முடிந்ததும் தனது ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று விடுகிறாராம். அவ்வப்போது பப்புக்கும் இருவரும் ஒன்றாக செல்கிறார்களாம். நடிகைக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட இந்த நெருக்கம் தற்போது யாராலும் பிரிக்க முடியாத நெருக்கமாக மாறி வருகிறதாம்.

நடிகரின் மனைவிக்கு இது தொடர்பாக தெரியவர, நடிகரிடம் கேட்டதற்கு அப்படி எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்புத் தளத்திற்கு நடிகரின் மனைவி வருவதை முன் கூட்டியே தனது டிரைவர் மூலம் தெரிந்து கொண்ட நடிகரோ, அன்று படப்பிடிப்பில் தனக்கும் நடிகைக்கும் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாதது போல படமாக்கச் சொன்னாராம். மேலும் நடிகையிடமும் இது தொடர்பாக கூறி, அவரையும் உஷாராக்கி விட்டாராம்.
சில்மிஷ நடிகர்: இப்படி இருக்கையில் நடிகரின் மனைவியும் சந்தேகம் எல்லாம் தீர்ந்தது என்று வீட்டிற்குச் சென்றுள்ளார். இப்படி இருக்கையில் நடிகரின் சில்மிஷ வேலைகளை ஏற்கனவே அம்பலப்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு நடிகரே ஆதாரங்களைக் கொடுப்பது போல நடிகையுடன் அவ்வப்போது வெளியே செல்வது நெருக்கமாக இருப்பது என்று இருந்துள்ளார்கள்.
பிரைவேட் வீடியோ: சமீபத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ஜோடியாக சென்றுள்ளனர். இப்படி இருக்கையில் நடிகரும் நடிகையும் மிகவும் நெருக்கமாக இருக்கும் பிரைவேட் வீடியோ ஒன்று சிக்கிவிட்டதாம். அதன் ஒரு பகுதியை மட்டும் இணையத்தில் கசிய விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள் நடிகரைப் பிடிக்காதவர்கள். நடிகரும் நடிகையும் ஓவர் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்த பலரும் டைவர்ஸ் கன்ஃபார்ம் போலயே என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications