எதிரிகளுக்காக பூஜை...? ராகு-கேது கோயிலில் வழிபாடு செய்த சர்ச்சை நாயகி!

By Staff

மும்பை : இந்திய அளவில் சிறப்பான நடிகையாக காணப்படுகிறார் சர்ச்சைகளுக்கு பெயர்போன அந்த ஹீரோயின்.

சமீபத்தில் வெளியான வரலாற்று தலைவியின் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

பல சர்ச்சைகளுக்கு உள்ளாகிவரும் இவர் சமீபத்தில் ராகு -கேது கோயிலில் வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

சர்ச்சை நாயகி

சர்ச்சை நாயகி

இந்திய அளவில சிறப்பான நடிகையாக உள்ளார் தலைவி படத்தின் நாயகி. தொடர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் சிறப்பான விமர்சனங்களை இவருக்கு பெற்றுத் தந்தது.

விவசாயிகள் குறித்த சர்ச்சை பேச்சு

விவசாயிகள் குறித்த சர்ச்சை பேச்சு

படத்தில் ஜெயலலிதாவை நினைவுக்கூறும் வகையில் இவரது நடிப்பு அமைந்திருந்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்து வருகிறார். ஆயினும் வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்வதில் முதலிடத்தில் உள்ளார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கண்டனங்கள் -விமர்சனங்கள்

கண்டனங்கள் -விமர்சனங்கள்

இதனால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளார். மேலும் இவர்மீது தொடர்ந்து போலீசில் புகார்கள் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து இவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்வதாக கூறப்படுகிறது.

சிறப்பு வழிபாடுகள்

சிறப்பு வழிபாடுகள்

இந்த பிரச்சினைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இவர் பல கோயில்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார் சமீபத்தில் ராகு -கேது கோயிலிலும் வழிபாடு மேற்கொண்டு தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அன்பான எதிரிகள்

அன்பான எதிரிகள்

மேலும் கேப்ஷனில், தன்னுடைய அன்பிற்குரிய எதிரிகளுக்காக தான் பிரார்த்தனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தன்மீது குறைவான புகார்கள் காணப்படவும், அதிகமாக லவ் லெட்டர்கள் இருக்கவும் தான் பிரார்த்தனை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராகு-கேது கோயிலில் வழிபாடு

ராகு-கேது கோயிலில் வழிபாடு

மேலும் ராகு -கேது கோயில் மிகவும் சிறப்பானது என்றும், திருப்பதி கோயிலுக்கு இணையானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அங்கு அவர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்குகள் மற்றும் அச்சுறுத்தல்களே இந்த வழிபாட்டிற்கு காரணமாக கூறப்படுகிறது.

கோயில்களில் தஞ்சம்

கோயில்களில் தஞ்சம்

தொடர்ந்து பொதுவெளியில் நடக்கும் விஷயங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இதன்மூலம் இவருக்கு கண்டனங்கள் மட்டுமின்றி கொலை மிரட்டல்களும் வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டியே கோயில் கோயிலாக சென்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X