தோளுக்கு மேல பையன்.. ஆனாலும் 12 வருஷமா நடிகையோடு லூட்டி அடிக்கும் வில்லன் நடிகர்!

By Staff

மும்பை: பாலிவுட் திரையுலகில் ஒரு புதிய கிசுகிசு பரவலாக பேசப்படுகிறது. முன்னணி நடிகை ஒருவர், படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஒருவருடன் கடந்த 12 ஆண்டுகளாக ரகசிய உறவில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திரையில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததோ இல்லையோ, இவர்கள் இருவரும் திரையைக் கடந்து அடிக்கும் லூட்டி இருக்கிறதே.. உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது என சக நடிகர்களே புலம்பும் அளவுக்கு இருக்கிறதாம். ஏற்கனவே அரசல் புரசலாக பேசப்பட்ட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை உறவு இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திரையுலக வட்டாரங்களில் இவர்களின் நெருக்கம் குறித்துப் பல பேச்சுக்கள் அடிபட்டாலும், இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

அந்த நடிகை, தனது அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர். அதேபோல், வில்லன் நடிகர் தனது தனித்துவமான நடிப்பால் புகழ் பெற்றவர். இருவரும் அவ்வப்போது பொது இடங்களில் ஒன்றாக காணப்பட்டாலும், தங்கள் உறவை வெளிக்காட்டாமல் மறைத்து வந்துள்ளனர். மேலும் வில்லன் நடிகரும் நடிகையும் அடிக்கடி வெளியூர்களுக்குப் புறப்பட்டுவிடுகிறார்களாம்.

Bollywood Gossip Villan Actor Who Relationship With Actress Wrong Way

மோகம்: நடிகை மீது கொண்ட மோகத்தால் வில்லன் நடிகர் பல நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறாராம். நடிகர் வந்துவிட்டால் நடிகையும் இயக்குநரிடம் சொல்லிவிட்டு கேரவனுக்குள் சென்று விடுகிறாராம். வெகு நேரம் ஆனாலும் நடிகை வருவதில்லையாம். நடிகரின் இந்த சேட்டைகளைப் பார்த்த பலரும் தோளுக்கு மேல பையன் வளர்ந்துட்டான் ஆனாலும் அடங்கமாட்டிங்கறாரே என்று பேசி வருகிறார்களாம்.

வர் லூட்டி: ஏற்கனவே இந்த நடிகை ஏற்கனவே ஒரு பிரபலத்துடன் இணைக்கப்பட்டு வதந்திகள் பரவிய நிலையில், இந்த புதிய தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே நடிகை நெருக்கமாக இருந்த பிரபலம் ஒரு கட்டம் வரை நடிகையே கதி என இருந்தாராம். ஆனால் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அந்த பிரபலம் வேறு ஒரு பெண் பிரபலமுடன் அட்டாச் ஆகி விட்டார் என கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் வில்லன் நடிகருக்கு நடிகையிடம் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்த உறவை உறுதிப்படுத்தினாலும், முழு விவரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன. இவர்களின் லூட்டி எங்கு போகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Read more about: bollywood kisu kisu kollywood cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X