தயங்கிய உச்ச நடிகர்.. தட்டித்தூக்கிய பாஸ் நடிகர்.. கடைசி நேரத்தில் நடந்த பரபர ட்விஸ்ட்!
சென்னை: இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே என ரசிகர்கள் பலரும் சமீபத்தில் வெளியான ஹாட் அப்டேட்டை பார்த்து ஆடிப்போயுள்ளனர்.
பிரம்மாண்ட வெற்றி கொடுத்த அந்த இயக்குநர் எப்படியாவது மீண்டும் உச்ச நடிகர் படத்தை இயக்கி விடலாம் என ஏகப்பட்ட ஐடியாக்களை போட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் இப்படியொரு ட்விஸ்ட் நடந்து இருப்பது திரையுலகினரையே ஷாக் ஆக்கி உள்ளது.
கடைசி நேரத்தில் பாஸ் நடிகர் இந்த கதைக்குள் எப்படி வந்தார்? என்பது தான் எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மகள் பண்ண வேலை
எப்படியாவது அப்பாவை இயக்கி பெரிய இயக்குநர் ஆகிவிடலாம் என்கிற திட்டத்தை தீட்டிய மகள் அதிலிருந்து விடாப்பிடியாக இருந்து விட்டார். ஏற்கனவே கஷ்டத்தை அனுபவித்து வரும் மகளுக்கு இந்த ஒரு உதவியை கூட செய்யாமல் சுயநலமாக இருக்கக் கூடாது என உச்ச நடிகர் நினைத்ததன் விளைவு தான் இப்படியொரு ட்விஸ்ட் நடக்கவே காரணம் என்கின்றனர்.

டபுள் பாக்ஸ் ஆபிஸ்
சமீபத்தில் பல நூறு கோடிகளை சொந்தமாக்கிய பாஸ் நடிகர் மற்றும் அந்த பிரம்மாண்ட இயக்குநர் இருவரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளது கோலிவுட்டுக்கு இன்னொரு டபுள் பாக்ஸ் ஆபிஸ் படத்தை கொடுப்பது உறுதி என தெரிகிறது.

சக்சஸ் மீட்டில் ஸாரி
சக்சஸ் மீட்டில் கூட பாஸ் நடிகர் பங்கேற்காமல் உச்ச நடிகர் தான் பங்கேற்று இருந்தார். எப்படியாவது உச்ச நடிகர் மற்றும் அந்த பிரம்மாண்ட இயக்குநர் படத்தை ஓகே செய்து விடலாம் என நினைத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய பல்பு கொடுத்த நடிகர் இயக்குநரிடமும் தயாரிப்பு தரப்பிடமும் ஸாரி சொல்லி விட்டாராம்.

அவரை விட்டால் இவர் தானே
உச்ச நடிகரை விட்டால் அடுத்த இடத்தில் இருப்பது இவர் தானே என இயக்குநர் ஒரே ஒரு போன் போட்டதுமே நீங்க சொன்னா உடனடியா பண்ணிடலாம் என பாஸ் நடிகர் சம்மதம் தெரிவித்ததும் கடகடவென்று அறிவிப்பையே வெளியிட்டுள்ளனர் எனக் கூறுகின்றனர். கதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம், உங்களுக்காக பண்ணுகிறேன் என்று சொன்ன உடனே இத்தனை ஆண்டுகளாக தப்பு பண்ணிட்டோமே என அந்த இயக்குநர் ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டாராம்.

பாவம் அந்த இயக்குநர்
பாஸ் நடிகரை அடுத்து நாம இயக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த டாப் நடிகர் படங்களை வரிசையாக இயக்கிய அந்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் இந்த முறை வேண்டாம், அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்கிற மெசேஜ் வந்ததும் அப்செட் ஆகிவிட்டாராம். அடுத்த படத்திற்கு எந்த நடிகரை தேர்வு செய்வது என்ன கதையை உருவாக்குவது என ஏகப்பட்ட குழப்பத்தில் அந்த இயக்குநர் ஆழ்ந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











