பஞ்சாயத்து பெருசாகிடுச்சு.. அந்த இயக்குநர் படத்தில் இருந்தே விலக முடிவெடுத்துட்டாரா பாஸ் நடிகர்?

By Staff

சென்னை: சமீபத்தில் ஒரு இயக்குநர் வச்சு செஞ்சதே போதும் அடுத்து அந்த இயக்குநர் படத்திலும் கமிட் ஆகி நடித்தால் மேலும், பல சிக்கல்களில் சிக்க வேண்டியது இருக்கும் என பாஸ் நடிகர் நினைத்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

பல விதமான படங்களில் அந்த பாஸ் நடிகர் நடித்து வந்தாலும், அவர் நடித்த சில படங்கள் மூலம் கிளம்பிய சர்ச்சைகள் இன்னமும் அவரை துரத்தி துன்புறுத்தி வருகின்றன.

தனது அடுத்த படத்தின் வியாபாரத்துக்காக பெரிய கடாவாக வெட்டினால் தான் சரியாக வரும் என அந்த இளம் இயக்குநர் போட்ட போடு ஒட்டுமொத்த சமஸ்தானத்தையும் ஆட்டம் காண வைத்து விட்டது.

சைலன்ட் கில்லர்: இயக்குநரை பேசுக் குழந்தை பேசு என பேசவிட்டு விட்டு பின்னாடி பெரிய ஆப்பாக அடித்து விட்டார் அந்த பாஸ் நடிகர். சோஷியல் மீடியா முழுவதும் அந்த இயக்குநரை டார்கெட் செய்து அடுத்து அவரை வைத்து எந்தவொரு தயாரிப்பாளரும் படம் பண்ண முடியாத அளவுக்கு பஞ்சராக்கி விட்டனர்.

Boss actor decides to avoid Controversial director movie?

இயக்குநர் பேசும் போதும் அதே அமைதி, இயக்குநரை பற்றி மற்றவர்கள் விளாசும் போதும் அதே அமைதி என இருந்து தனது காரியத்தை கமுக்கமாக சாதித்துக் கொண்டார் அந்த நடிகர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

முதலாளிக்கே ஆப்பு: குறியீடுகள் மூலமாக படம் எடுக்கிறேன் என கிளம்பி உள்ள அந்த இளம் இயக்குநர் அப்போதே அந்த பாஸ் நடிகர் குறியீடுகளை வைத்து இயக்கிய படத்தை பற்றி பொதுவெளியில் ஓபான பேசியது தற்போது அவரது முதலாளிக்கே ஆப்பாக அமைந்து விட்டது என ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த இயக்குநரை இயக்குநராக்கி அழகுப் பார்த்த தயாரிப்பாளர் இயக்குநர் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்த பாஸ் நடிகர் தற்போது அவரது படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்கிற யோசனையில் ஆழ்ந்து விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

அடுத்த அசிங்கம் தேவையா: முன்னோடி இயக்குநர் நைசாக எப்படி உச்ச நடிகரை வைத்தே அவரது கொள்கைக்கு எதிரான படங்களை இயக்கி ஹிட் அடித்திருந்தார் என்கிற பக்குவமே இல்லாமல் இந்த இளம் இயக்குநர் பண்ண வேலையால், அடுத்து பாஸ் நடிகரையும் பக்காவாக ஏமாற்றி படம் எடுக்கலாம் என்கிற முயற்சியில் இருந்த இயக்குநருக்கு பெரும் சிக்கலை இளம் இயக்குநரின் பேச்சு கொடுத்து விட்டதாக கூறுகின்றனர்.

மீண்டும் பொதுவெளியில் அசிங்கப்படத் தேவையில்லை, அந்த படம் வேண்டாம் உங்களுக்கு என நெருங்கிய நட்பு வட்டாரங்கள் பாஸ் நடிகருக்கு அட்வைஸ் செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பாஸ் நடிகரும் இப்போதைக்கு பல படங்கள் கைவசம் உள்ள நிலையில், அந்த இயக்குநர் படத்தை தவிர்த்து விடும் முடிவுக்கே வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X