ஓவர் பில்டப் வேண்டாம்.. அப்படியே அடக்கி வாசிங்க.. டைரக்டர் திடீரென பம்ம என்ன காரணம்?
சென்னை: கடந்த முறை ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு தனது படத்தை ரொம்பவே பில்டப் செய்த இயக்குநருக்கு படம் வெளியான பின்னர், பலத்த அடி விழுந்தது. ஆனாலும், உச்ச நடிகர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அடுத்த முறை துண்டு தவறக் கூடாது என உஷாராக இருப்பதாக அவரே கூறிக் கொண்டு வந்தார்.
படம் முடிந்து விரைவில் படையலுக்கு தயாராக உள்ள நிலையில், திடீரென டைரக்டர் பம்ம ஆரம்பித்து இருப்பது ஏன் என்பது தான் ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தையும் மிகப்பெரிய கேள்விக்குள் ஆளாக்கியிருப்பதாக கூறுகின்றனர்.

நல்ல சரக்காக இருந்தால், தாராளமாக பில்டப் கொடுக்கலாமே என்றும் அடக்கி வாசிக்க ஆரம்பித்ததும் இந்த படமும் சொதப்பி விடுமோ, இந்த வருடமே அவ்வளவு தானா என்கிற பேச்சுக்களை எல்லாம் நடிகரின் ஹேட்டர்கள் இயக்குநரின் செயலை வைத்து கடைசியாக வெளியாகி ஃப்ளாப் கொடுத்த அந்த பாஸ் நடிகரின் படத்தை இயக்கிய இயக்குநருடன் கம்பேர் செய்து கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
அடக்கி வாசிக்கும் இயக்குநர்: சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதெல்லாம் அந்த காலம். குறைகூடம் தான் கூத்தாடும் என்பது போல ஓவர் பில்டப் உடன் ஹெவி புரமோஷன் செய்யும் படங்கள் எல்லாம் தொடர்ந்து சோலி முடிந்து வரும் கதையை பார்த்து பார்த்து அந்த இயக்குநருக்கு பயமே வந்து விட்டதாம். ஏற்கனவே இமய மலை ரேஞ்சுக்கு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், நமக்குத் தெரிந்ததை மட்டுமே நாம செஞ்சிருக்கோம், இதுக்கு மேல தேவையில்லாமல், பில்டப் செய்து படத்தை பற்றிய பல கனவுகளுடன் வந்து கடைசியாக சிம்பிள் கதையை பார்த்து ரசிகர்கள் அப்செட்டானால், பாக்ஸ் ஆபீஸ் பஞ்சராகி விடும் என்பதற்காகவே அமைதியாக இருக்கிறார் இயக்குநர் என்கின்றனர்.
தயங்கும் தயாரிப்பு நிறுவனம்: இந்நேரம் உலகளவில் விழாக்களை நடத்தி தயாரிப்பு நிறுவனமும் தாம் தூம் என குதித்திருக்கும். ஆனால், அப்படியே இதற்கு மேல் பெரிதாக பணத்தை வாரி இரைக்காமல், எப்படி இதை பிசினஸ் செய்து போட்ட காசையாவது எடுப்பது என்பதில் மட்டுமே தயாரிப்பு நிறுவனம் குறியாக இருப்பதால் தான் அவர்களும் தயக்கம் காட்டி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மல்டி ஸ்டார்களை மட்டுமே நம்பி: நல்ல கதைக்கு மல்டி ஸ்டார் நடிகர்கள் வந்து துணையாக நின்றால், படம் தூள் கிளப்பி விடும். ஆனால், மல்டி ஸ்டார்களை மட்டுமே நம்பி படத்தை எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று எல்லாம் நம்பினால், படம் வெளியாகி கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு டைரக்டரை தூக்கி வைத்து பேசும் பிரபலங்கள் எல்லாம், அதன் பின்னர், அவர் ஒரு வேஸ்ட் பீஸ் என்று சொல்லும் நிலையும் வந்து விடும் என்கின்றனர்.
உள்ளுக்குள் அதிக பயம்: இந்த முறை டைரக்டர் போட்ட கணக்கு சரியாக வரவில்லை என்றால், அப்படியே இவரையும் பார்சல் பண்ணி அனுப்பிடுவார்களோ என்கிற பயம் இயக்குநருக்கு அதிகமாகவே உள்ளதாக கூறுகின்றனர். ஒரு அளவுக்கு ஹைப்பை குறைத்து ரசிகர்களை தான் எடுத்து வைத்துள்ள எமோஷனல் டிராமாவை பார்க்க வைத்து விட்டால் போதும், முதல் ஒரு வார கலெக்ஷன் வந்தாலே தலை தப்பித்து விடும் என இருப்பதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன. இதெல்லாம் எந்தளவுக்கு உண்மையோ அல்லது ஹேட்டர்கள் கிளப்பி விடும் விஷயங்களா? என்பதே தெரியவில்லை என கோடம்பாக்க வாசிகள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











