»   »  அடுத்த வருஷம் கல்யாணம்- நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிவரும் காதலர்!

அடுத்த வருஷம் கல்யாணம்- நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிவரும் காதலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க... இல்லப்பா சேர்ந்துதான் இருக்காங்க... சர்ச்சை நாயகியையும் அவரது லேட்டஸ்ட் காதலரான சிவனையும் சேர்த்து கிசுகிசுக்கள் எழுதி ஓய்ந்துவிட்டது மீடியா. யார் என்ன சொன்னால் என்ன என்று இருவரும் சேர்ந்துதான் வசிக்கிறார்கள். ரகசியமாக திருமணமே

முடிந்திருந்தாலும் அறிவிக்க வேண்டுமே...? அது எப்போது?

Boy Friend spreads marriage news

தனது கேரியரின் உச்சத்தில் இருக்கிறார் நாயகி. இப்போதெல்லாம் யார் கால்ஷீட் கேட்டுப்போனாலும் நான்கு விரல்களை காண்பிக்கிறாராம். காரணம் விரைவிலேயே திருமணம் செட்டில் ஆகவிருப்பதுதானாம். இதை உறுதிபடுத்தும் வகையில் இயக்குனர் தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் அடுத்த வருஷ ஆரம்பத்தில கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்காங்க... என்று சந்தோஷமாக சொல்லிவருகிறாராம். ஆமாம், என்னதான் காதலனாக இருந்தாலும் மேடத்தை வாங்க போங்க போட்டுதான் பொதுவெளியில் பேசுகிறாராம்.

இந்நிலையில் சம்பளம் அதிகம் கேட்பதாலும், காதலர் ஸ்பாட்களுக்கே வந்து விடுவதாலும் பெரிய ஹீரோக்கள் நடிகையை அவாய்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

English summary
Boy friend of top heroine is spreading their marriage news among his close friends.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil