இந்த வெற்றி நம்ம படத்துக்கு கிடைத்திருக்கணும்.. ஃபிளவரை பார்த்து பொங்கி அழுத ஃபயர்.. அப்செட்!

By Staff

சென்னை: நெருப்பை மையப்படுத்தி செம ஃபயராக பிரைட் நடிகரின் படம் வெளியான நிலையில், ராஜா காலத்து படம் என்றதும் ரசிகர்கள் வாயை பிளந்துக் கொண்டு பார்த்துவிடுவார்கள் என அந்த நடிகர் ரொம்பவே இயக்குநரின் பேச்சை கேட்டு நம்பி ஏமாந்து போயுள்ளார். இஷ்டத்துக்கு லாஜிக் மீறல்களை எல்லாம் வைத்து படம் எடுத்தால் மற்ற மொழி ரசிகர்களை போல கோலிவுட்டிலும் ரசிகர்கள் படம் பார்த்துவிடுவார்கள் என நினைத்தது தான் நடிகர் செய்த மிகப்பெரிய தவறு என்கின்றனர்.

தனது படத்தின் தோல்வியைக் கூட கொஞ்சம் வலியுடன் தாங்கிக் கொண்ட பிரைட் நடிகர் சமீபத்தில் வெளியான பக்கத்து ஸ்டேட் மாஸ் மசாலா படத்தின் ஒவ்வொரு நாள் பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பு வரும்போதெல்லாம் அப்செட் ஆகி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

gossip kollywood actors gossip

ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட நிம்மதியே இல்லாமல் அந்த நடிகர் இருந்து வருவதாகவும் செட்டில் அவரை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் பணியாட்கள் கூட பாவமாக பார்ப்பதாகவே நடிகருக்கு தெரிவதால் ரொம்பவே கடுப்பாகி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்செட்: ஆன் கேமராவில் நடிப்பில் மிரட்டினாலும் பிஹைண்ட் தி கேமரா முன்பை போல ஜாலியாகவே பிரைட் நடிகர் இல்லை என்று கூறுகின்றனர். எப்படியாவது வெற்றிக் கோட்டையை பிடித்தே தீர வேண்டும் என்கிற வெறியில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டாராம். ஒவ்வொரு ஷாட்டும் எப்படி வந்திருக்கிறது என ஷூட்டிங் முடித்துவிட்டு மானிட்டர் செக் செய்துவிட்டுத் தான் செட்டில் இருந்தே கிளம்புகிறார் என்கின்றனர். இதற்கு முன்னதாக டைரக்‌ஷன் டீமில் அதிகம் தலையிடாமல் இருந்து வந்ததால் தான் பல ஆண்டுகளாக தோல்வியை தழுவிக் கொண்டிருக்கீங்க என அவரது புதிய ஆலோசகர் சொன்னதால் தற்போது மற்றவர்களை நம்பாமல் அவரே இறங்கி வேலை பார்த்து வருகிறாராம்.

என் படத்துக்கு வரவேண்டியது: மேலும், சமீபத்தில் வெளியான லாஜிக்கே இல்லாமல் மசாலா காட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வரும் நிலையில், என்னோட படத்துக்கு இப்படியான நம்பர்ஸ் வந்திருக்கணும். ஆனால், எல்லாரும் சேர்ந்து சதி பண்ணிட்டாங்க என ஒவ்வொரு முறை பாக்ஸ் ஆபிஸ் நம்பர்ஸ் வரும்போதெல்லாம் பயங்கர டென்ஷன் ஆகிவிடுகிறார் என்கின்றனர்.

பயப்படும் டைரக்‌ஷன் டீம்: இதுவரை அசால்ட்டாக இருந்து வந்த நடிகர் இந்த முறையும் தோல்வியை சந்தித்த நிலையில், டைரக்‌ஷன் டீமுடன் ஜாலியாக பேசுவது, விளையாடுவது என்றெல்லாம் இல்லாமல் சிடு சிடுவென இருப்பதால் இயக்குநரே நடிகர் அருகே செல்ல பயப்படுவதாகவும் அவரது டைரக்‌ஷன் டீம் அதற்குமேல் பயப்படுவதாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X