பயத்தில் பிரைட் நடிகர்.. தொடர்ந்து சொதப்பும் பெரிய படங்கள்.. நம்ம நிலைமை என்னாகுமோ என ஒரே புலம்பல்?
சென்னை: சோலோவாக முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும் பில்டப்புகளுடன் வெளியாகி வரும் நிலையில், கடந்த ஆண்டை போல வெற்றிக்கனி கிடைக்காமல் இந்த ஆண்டு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது என்கிற நிலைமை உருவாகியுள்ளது சினிமா உலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
2024ம் ஆண்டு கோலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களும் வெளியாக போகிறது. 1000 கோடி வசூலை அடித்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவுக்கு சரியான டஃப் கொடுப்போம் என எதிர்பார்த்தனர்.

ஆனால், ஏற்கனவே ஏகப்பட்ட விலை உயர்வால் கஷ்டத்தில் இருக்கும் மக்கள் தியேட்டரில் அதிகரித்துள்ள விலை உயர்வால் 4 வாரம் வெயிட் பண்ணால் வீட்டிலேயே படுத்துக் கொண்டு படம் பார்க்கலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டனர் என்றே கூறுகின்றனர்.
சொதப்பும் பெரிய படங்கள்: இந்த ஆண்டு சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் மக்கள் தியேட்டருக்கு வந்தாலே வெற்றிப் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 5 கோடியில் எடுத்து விட்டு 30 கோடி வசூல் செய்தால் அது தான் பிளாக்பஸ்டர் படமாக மாறுகிறது. ஆனால், பல நூறு கோடிகளில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் அதே அளவுக்கான ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வர முடியாமல் தவித்து வருகின்றன.
பயத்தில் பிரைட் நடிகர்: இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பிரைட் நடிகரின் பீரியட் படம் வந்திருந்தால் கூட இந்நேரம் ஒரு வழியாக ஓடியிருக்கும் என்றும் ஆனால், ஒவ்வொரு படமும் வரட்டும் பல்ஸ் பார்க்கலாம் என தள்ளிக் கொண்டே போய் வரும் நிலையில், தொடர்ந்து மற்ற படங்களின் தோல்வியால் தற்போது பிரைட் நடிகர் ரொம்பவே பயத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
தயாரிப்பாளருக்கு தலைவலி: பிரைட் நடிகரை விட படத்தின் தயாரிப்பாளருக்கு ரொம்பவே தலைவலி ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே வெளியான அந்த தேடல் படமும் தேய்ந்து போன நிலையில், இந்த பீரியட் படம் மக்களை தியேட்டருக்கு கொண்டு வருமா? என்றும் மற்ற மாநில ரசிகர்களை கவருமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு படத்தை வெளியிடலாமா? அல்லது இன்னமும் கொஞ்சம் தள்ளிப் போகலாமா? என்றெல்லாம் யோசித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.
இண்டஸ்ட்ரி ஹிட் இலக்கு ஈஸி: பிரைட் நடிகரின் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸ் பெஞ்ச் மார்க்கை இந்த ஆண்டு வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக செட் செய்து வைக்காத நிலையில், இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் டார்கெட் ரொம்பவே கம்மி தான் என்கின்றனர். ஆனால், அதை அடிக்க வேண்டும் என்றால் கூட படம் பெரியளவில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பது தான் உச்சகட்ட சோதனையாக உள்ளது.
விமர்சகர்களாக மாறிய ரசிகர்கள்: முதல் நாள் யார் படத்தை பார்க்கப் போகிறோம். படம் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை கொடுக்கிறது என்றெல்லாம் தெரிந்துக் கொண்டு படத்தை கொண்டாட செல்லாமல், அந்த படத்தை விமர்சித்து காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் பல ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி வருவதாக கூறுகின்றனர். சமீபத்தில் ஒரு ஹீரோ கூட எவ்வளவு தான் நான் முட்டுக் கொடுப்பது என கதறியழுததையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











