அப்போ அதிக தொகை எதிர்பார்த்த ஹீரோ.. இப்போ கொடுக்கிறதை கொடுங்கன்னு கப்சிப்.. அதுதான் விஷயமா?

சென்னை: மனைவியின் படத்துக்கு அந்த பெரிய நிறுவனம் பேசும் போதே, கணவர் படத்துக்கும் சேர்த்தே பேரம் பேசியதாம்.

ஆனால், இவ்ளோ கம்மியான தொகைக்கு எல்லாம் படத்தை கொடுக்க முடியாது என அடம் பிடித்த அவர், தற்போது வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள அந்த விஷயம் தான் காரணம் என்கின்றனர்.

சமூக வலைதளத்தில் சமீபத்தில் கெத்துக் காட்டிக் கொண்டு இருந்த அவரது ரசிகர்களும் தற்போது அந்த சூப்பர் மாடல் கிண்டலுக்கு ஆளாகி உள்ளனர்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

உங்க மனைவி நடிகையின் படத்தை அந்த தளத்தில் வெளியிட்டால் அவ்வளவு தான் உங்க படத்தை எப்போதுமே தியேட்டரில் வெளியிட விட மாட்டோம் என அந்த பிரகாச நடிகருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், போட்ட காசுக்கு மேல கிடைக்குதேன்னு அந்த படத்தை ரிலீஸ் செய்து அந்த பெரிய நிறுவனத்துக்கு இங்கேயும் கதவை திறந்து விட்டார்.

சொன்ன வாக்கு

சொன்ன வாக்கு

மனைவி நடிகையின் படம் தான் அந்த தளத்தில் வெளியாகும் என்றும், என் படம் கண்டிப்பா தியேட்டரில் தான் வெளியாகும் என தனது ரசிகர்களுக்கு உறுதியான வாக்கு கொடுத்து இருந்தார் அந்த பிரகாச நடிகர். ஆனால், காலம் ஆக ஆக அவருக்கு வந்த பிரஷர், அது போன மாசம்.. இது இந்த மாசம் ரேஞ்சுக்கு ஆளே மாறி விட்டார்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

இனிமே சமூக வலைதளத்தில் எப்படி கெத்துக் காட்டப் போகிறோம் என்று தெரியாமல், தங்கள் தலைவனின் இந்த புதிய அறிவிப்பால் ஆடிப் போயுள்ளனர் அவரது ரசிகர்கள். ஒரு பக்கம் படத்தை பார்த்து விடப் போகிறோம் என்ற சந்தோஷம் இருந்தாலும், இதனால் ஸ்டார்டாம் நிச்சயம் அடிவாங்குமே என ரொம்பவும் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

இது தான் சாக்கு

இது தான் சாக்கு

கிடைச்சது நல்ல மேட்டர் என அந்த சர்ச்சை மாடல் அழகியும், நான் சொன்னது நடந்துடுச்சு, உங்க நடிகரின் மார்க்கெட் காலி, இனி அந்த மாஸ் நடிகரின் மார்க்கெட்டும் சீக்கிரமே அதள பாதாளத்துக்கு செல்லும் என இது தான் சாக்கு என தனது வஞ்சத்தை தீர்த்துக் கொண்டு வருகிறார்.

கொடுக்கிறத கொடுங்க

கொடுக்கிறத கொடுங்க

ஆரம்பத்தில் சொன்ன தொகைக்கே தற்போதும் அந்த படத்தை விற்றுள்ளாராம் அந்த பிரகாச நடிகர். முன்னதாக பேரம் பேசப்பட்ட போதே, விற்று இருந்தால், கொஞ்சம் கூடுதல் தொகை கிடைத்திருக்கும் என்றும், தற்போது வட்டி பிரச்சனை மற்றும் குடும்ப பிரஷர் தாங்க முடியாமல் கொடுக்கிறத கொடுங்க என சரண்டர் ஆகி உள்ளதாக கோலிவுட்டில் சிலர் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X