அப்பா பெயரை வேண்டுமென்றே அசிங்கப்படுத்துகிறாரா அந்த மியூசிக் ஹீரோ.. அப்செட்டில் பிரகாச நடிகர்!

சென்னை: பிரகாச நடிகரின் அப்பாவும் பழம்பெரும் நடிகருமான அந்த பிரபலத்தின் பெயரை வேண்டுமென்றே மியூசிக் ஹீரோ அசிங்கப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

படத்தின் டைட்டில் மற்றும் பாட்டு எல்லாம் திட்டமிட்டு அந்த பிரபல நடிகரை அவமானப்படுத்துவதாகவே அமைக்கப்பட்டு வருவதாக கசிந்த தகவலால் பிரகாச நடிகரின் குடும்பமே அப்செட் ஆகி உள்ளது.

மேலும், அந்த படம் குறித்து முழுமையாக விசாரிக்கவும் பிரகாச நடிகர் தரப்பில் இருந்து உத்தரவு போடப்பட்டு இருக்கிறதாம்.

பழம்பெரும் நடிகர்

பழம்பெரும் நடிகர்

கோலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் இன்னமும் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் நல்ல நடிகர் அவர் மட்டும் தான். இந்த வயதிலும் ஓயாது ஏகப்பட்ட மாணவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார். அவர் செய்த சாதனைகளை கொண்டாடவில்லை என்றாலும், அவரது பெயரையாவது களங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும்.

சிங்கங்கள்

சிங்கங்கள்

சினிமா உலகுக்கு இரண்டு சிங்கங்களை கொடுத்திருக்கும் அந்த பிரபல நடிகரின் பெயரை அசிங்கப்படுத்தும் விதமாக இளம் மியூசிக் ஹீரோ ஒருவர் தனது அடுத்த படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்தே படம் எப்படி வரப் போகிறதோ என்று அஞ்சிய பிரகாச நடிகர் அவர் பயந்தது போலவே தற்போது நடைபெற்று வருவதை பார்த்து அன்றே கணித்தது சரியாக உள்ளது என நினைத்து வாடி வருகிறாராம்.

குடும்பத்தை இழுத்து

குடும்பத்தை இழுத்து

படத்தின் டைட்டில் மட்டுமின்றி பாடலின் டைட்டிலும் வேண்டுமென்றே அந்த பிரபல நடிகரையும் அவரது குடும்பத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியான நிலையில், இரண்டு மகன்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

இன்னும் என்ன காத்திருக்கோ

இன்னும் என்ன காத்திருக்கோ

இதுமட்டும் தான் என நினைத்து சும்மா இருந்து விட முடியாத நிலைமையில் பிரகாச நடிகர் குடும்பமே உள்ளது. படம் வெளியானால் இன்னும் அந்த பெயரை எப்படியெல்லாம் டேமேஜ் செய்ய காத்திருக்கிறார் என்பது தெரியவில்லையே என படம் குறித்த விபரங்களை கலெக்ட் பண்ணவும் பிரகாச நடிகர் ரகசியமாக ஆள் போட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

என்ன தகராறு

என்ன தகராறு

இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்றும், ஏதாவது உள்குத்து இல்லாமல் இப்படி எல்லாம் அந்த மியூசிக் ஹீரோ பண்ண மாட்டாரே என்றும் கோடம்பாக்கத்தில் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். எல்லாவற்றையும் விட அந்த மியூசிக் ஹீரோவின் பிராண்டிய தலையை பார்த்தால் தான் பற்றிக் கொண்டு வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X