கணவருக்காக கதை கேட்பதே மனைவி தானாம்.. கடவுளாகவே கொண்டாடணும்னு குறுக்கே வருவது தான் பிரச்சனையா?
சென்னை: கட்டிய மனைவிக்கு கணவர் தான் கடவுள் என்கிற காலமே மாறிப்போய் நண்பர்களாக பழக ஆரம்பித்துவிட்டனர். ஆனால், பிரைட் நடிகரை கடவுளாகவே பார்த்து வருகிறாராம் அவரது மனைவி. அதன் காரணமாக அந்த நடிகர் நடிக்கும் படங்களின் கதைகளையும் கேட்டு அதில், இப்படியொரு டெமி காட் விஷயம் இருக்க வேண்டும் என்பதை வலுக்கட்டாயமாக திணிக்கச் சொல்வது தான் நடிகரின் படங்கள் கடந்த சில வருடங்களாக சரியாக போகாமல் போனதற்கு காரணமே என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி விட்டனர்.
ஆரம்பத்தில் தனது படங்களுக்கான கதைகளை நடிகரே எந்தவொரு தலையீடும் இல்லாமல் கேட்டு நடித்து வந்த நிலையில், பல புதிய முயற்சிகளை செய்து ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் தான் படங்களை கொடுத்து தனக்கான ஒரு தனி இடத்தையே பிடித்தார்.

ஆனால், சமீப காலமாக நடிகருக்கான ரசிகர்கள் வட்டம் என்பதே அப்படியே கணிசமாக குறைந்து விட்டது என்றும் தொடர்ந்து அவரது படங்கள் சொதப்ப காரணமே மனைவியின் தலையீடு அதிகம் இருப்பது தான் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
கதையில் தலையீடு: பிரைட் நடிகர் ரொம்ப காலமாகவே ஒரு படத்தை பண்ண வேண்டும் என்கிற உறுதியுடன் இருந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த படத்தை இயக்க வேண்டிய இயக்குநர் ரொம்பவே லேட் செய்து வருவதால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என நடிகரின் மனைவி சில கதைகளை கேட்டு ஓகே செய்து நடிகரை வழி நடத்தி வருகிறார் என்கின்றனர். ஆரம்பத்தில் நடிகரின் அப்பா செய்து வந்த அந்த வேலையை சமீப காலமாக மனைவி பார்த்து வருகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
கடவுளாக காட்டுங்க: பிரைட் நடிகரின் காதல் மனைவியும் தனது கணவருக்காக நல்ல நல்ல இயக்குநர்களையே தேர்வு செய்து நல்ல கதைகளை பண்ண எந்தளவுக்கு முயற்சிகளை எடுக்க முடியுமோ செய்து வருகிறார் என்கின்றனர். ஆனால், அவர் செய்யும் ஒரே ஒரு தப்பு என்னவென்றால் தேவையில்லாமல் தனது கணவரை கடவுளாக காட்டியாக வேண்டும் என இயக்குநர்களிடம் வேண்டுமென்றே நிர்பந்தம் வைப்பது தான் என்றும் சில இயக்குநர்களுக்கு அதில் பெரிதாக ஈடுபாடு இல்லாத நிலையில் தான் பிரைட் நடிகர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வருவதாக கூறுகின்றனர்.
பக்தி அதிகம்: நடிகருக்கும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ள நிலையில், அவர் கேட்டதுமே இதுபோன்ற கதைகளை டிக் அடித்து நடிக்க ஆரம்பித்துவிடுவார் என்பதால் இயக்குநர்களும் அந்த நடிகரை நெகட்டிவ் ஷேடில் காட்ட நினைத்தாலும் கடவுள் பிம்பத்தை உள்ளே திணிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு தடுமாறி வருவது தான் யதார்த்தமான உண்மை என சினிமா வட்டாரத்தில் நடிகரின் காது படவே சிலர் பேச ஆரம்பித்து விட்டார்களாம்.
அடுத்த படமும் அப்படித்தானா?: நடிகரின் அடுத்த படமும் இதே டோனில் தான் இருக்கும் என்கின்றனர். பிரைட் நடிகரின் மனைவி இப்படியொரு ஃபார்முலாவை யோசிக்க காரணம் மற்ற மொழிகளில் கடவுள் மற்றும் ஆன்மிகத்தை டச் செய்யும் படங்கள் பெரிதாக வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தனது கணவரும் பெரிய வெற்றியை பெறவே மனைவி அப்படி செய்தார் என்றும் ஆனால், இவருக்குத்தான் அது செட்டாக மாட்டேங்குது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











