தம்பி நடிகருக்கு தலைவலியாக மாறிய டைரக்டர்.. அவர் எஸ்கேப் ஆக இப்படியா கோர்த்து விடுவாரு?
சென்னை: பல வருடங்களாக தன்னை கட்டிப்போட்டு இந்த படத்தை எடுக்கச் சொல்லி டார்ச்சர் செய்த நிலையில், எடுத்து கொடுத்த நிலையிலும், படம் வெளியாகும் வரை தம்பி நடிகர் இயக்குநரை சிறை பிடித்து வைத்த நிலையில் தான் டைரக்டர் அவருக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.
எப்போதுமே ஒரு படம் வருவதற்கு முன்னாடி அந்த படம் 100 பாட்ஷா, 200 படையப்பா, 1000 கில்லி என உருட்டுவார்கள். ஆனால், கடைசியில் வெளியான பின்னர், அந்த படம் அந்த படத்தின் டைட்டிலுக்கு கூட வொர்த் இல்லாத படமாக இருந்து விடும்.

அப்படிப்பட்ட பட்ட படத்தை எடுத்தாலும், பில்டப் கொடுக்காமல் டைரக்டரே பிசினஸுக்கு வேட்டு வைத்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ரிசல்ட்டை சொல்லி வேட்டு வைத்து விட்டாரெ என தம்பி நடிகர் ரொம்பவே தலைவலியில் உள்ளார் என்கின்றனர்.
குடும்பத்துக்கே சூனியம்: ஆரம்பத்தில் தொட்டதெல்லாம் தூள் பறக்க குடும்ப நடிகர்களின் படங்கள் எல்லாம் மெகா பிளாக்பஸ்டர் ஆகி வந்த நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சூனியம் வைக்கப்பட்டு விட்டதா? ஏன் தொடர்ந்து மாறி மாறி தோல்விகளும் நஷ்டங்களுமே சந்தித்து வருகிறார்கள் என்கிற குழப்பம் குடும்பத்துக்கே இருந்துக் கொண்டு தான் இருக்கின்றன. பல இடங்களுக்குச் சென்று அதற்கான பரிகாரங்கள் செய்தாலும், இன்னமும் வெளிச்சம் வரவில்லை என்பது தான் அவர்களுடைய மனநிலையாக உள்ளது.
டைரக்டரே வில்லன் ஆகிட்டாரு: எப்போதுமே ஒரு படம் வெளியாகி தோல்வியை சந்தித்து அதிக ட்ரோல்களை தாங்க முடியாத நிலையில், தான் சில இயக்குநர்கள் அந்த படத்தை விடுங்க, அடுத்த படத்தில் உங்களை கண்டிப்பாக திருப்தி படுத்துறேன். ஆளவிடுங்கடா சாமி என சொல்வார்கள். ஆனால், அடுத்த படத்தை அதை விட மோசமாக கொடுத்து அடிவாங்கும் பெரிய டைரக்டர்களும் சமீப காலமாக சாபக்கேடாக மாறி வரும் நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே இது என்னோட ஃபேன்ஸுக்கான படமில்லை என கிரேட் எஸ்கேப் ஆக ஏகப்பட்ட உள்குத்துகள் தான் காரணம் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இதனால், தம்பி நடிகர் டோட்டல் அப்செட் ஆகிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications