பிரைட் நடிகருடன் சேர்த்து தம்பியையும் யாருமே கண்டுக்கல.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானா?
சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்து பல ஆண்டுகள் நல்ல நல்ல படங்களை கொடுத்து எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் டாப் நடிகர்களாக வளர்ந்து வந்த பிரைட் நடிகரும் அவரது தம்பியும் சமீப காலமாக சினிமா மார்க்கெட்டில் பெரிய சரிவை சந்தித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமே அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் டீமில் இருந்த சில முக்கியப் புள்ளிகள் பார்த்த வேலை தான் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

தொடர்ந்து தவறான படங்களை தேர்வு செய்து வந்த நிலையில், அண்ணனை போல தம்பியும் தனது மார்க்கெட்டை இழந்து தவித்து வருகிறார் என்றும் இதையெல்லாம் சரி செய்யத்தான் புதிய டீமை தற்போது உருவாக்கி உள்ளார் பிரைட் நடிகர் எனக் கூறுகின்றனர்.
டிரெண்டாகாத விழாக்கள்: பிரைட் நடிகரின் புதிய பட அறிவிப்பு மற்றும் தம்பி நடிகரின் புதிய படம் ரிலீஸ் ஆகும் அறிவிப்பு என அடுத்தடுத்து சினிமாவில் பெரிய விழாக்களை நடத்தி வந்தாலும், யாருமே பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்றும் ரசிகர்கள் மத்தியிலோ சமூக வலைதளங்களிலோ டிரெண்டாகாமலே போய் விட்டது என்றும் கூறுகின்றனர்.
சங்கடத்தில் சகோதரர்கள்: இளம் நடிகர்கள் எல்லாம் உள்ளே புகுந்து தங்களுடைய இடங்களை துவம்சம் செய்து வருவதை கண் முன்னே பார்த்தும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சங்கடத்தில் அண்ணனும் தம்பியும் இருந்து வருகிறார்கள் என்றும் இப்படி இவர்களது மார்க்கெட் சரிய காரணமே இவர்களுடன் கூடவே இருந்துக் கொண்டு உள்ளடி வேலை செய்த நபர் தான் காரணம் என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
எல்லாம் மாறும்: பழைய படி எல்லாமே மாறிவிடும் என்கிற நம்பிக்கையில் இருவரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். கண்டிப்பாக மீண்டும் விட்ட இடத்தை கூடிய சீக்கிரமே இருவரும் பிடித்து விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என தொடர்ந்து பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி டேமேஜ்களை சரி செய்து வருகின்றனர் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











