புதுசா பட வாய்ப்புகளும் போச்சாம்.. தம்பியின் தயவை நாடும் அண்ணன்.. தூதாக சென்ற அம்மா?

By Staff

சென்னை: தம்பியின் பேச்சைக் கேட்காமல் அந்த இயக்குநர் அப்படியொரு படத்தில் நடித்து தனது மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டதாக கோடம்பாகத்தில் பரவலாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

சீனியர் இயக்குநரின் நடிப்பு சிறப்பாக இருக்கு என புக் பண்ணி வந்த இயக்குநர்களும் சமீபத்திய படம் பண்ண அதிர்வலை காரணமாக புதிய படங்களில் அவரை கமிட் பண்ண வேண்டாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்தடுத்த ஃபிளாப்களை கொடுத்து நஷ்டம் ஏற்படுத்தி தயாரிப்பாளர் தலையில் பெரிய துண்டாக போட்ட நிலையில், இயக்குநருக்கு புதிய பட வாய்ப்புகளும் வருவதில்லையாம்.

சரக்கு தீர்ந்து விட்டது

சரக்கு தீர்ந்து விட்டது

ஆரம்ப காலக்கட்டத்தில் சைக்கோத் தனமாக படங்களை இயக்கி சில ஹிட்களை கொடுத்து வந்த அந்த இயக்குநர் அதன் பிறகு சரக்கு முற்றிலும் தீர்ந்து விட்டதால் சொதப்பல் இயக்குநராக மாறி விட்டார். சில பெரிய பட்ஜெட் படங்களை இயக்குகிறேன் என்கிற பெயரில் தயாரிப்பாளர்களுக்கு பட்டை நாமத்தை போட்டு விட்டார் அந்த இயக்குநர்.

தம்பி தயவில்

தம்பி தயவில்

மற்ற தயாரிப்பாளர்களோ நடிகர்களோ அந்த இயக்குநரை நம்பி படங்களை கொடுக்காமல் இருந்த நிலையில், தம்பியை டார்ச்சர் செய்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி இருந்தார் அந்த இயக்குநர். ஆனால், எதிர்பார்த்ததை போலவே அந்த படமும் படு தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் பழைய குருடி கதவை திருடி என்கிற கதைக்கே மாறிவிட்டார்.

கடுப்பான தம்பி

கடுப்பான தம்பி

நீண்ட ஆண்டுகளாக அண்ணனை நம்பி படத்தில் நடிக்காமல் இருந்து வந்த தம்பி கடைசியில் அவரது தொல்லை தாங்க முடியாமல் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்த நிலையில், படம் படுத்தே விட்ட நிலையில், தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையே முட்டிக் கொள்ள அண்ணன் காரணமான நிலையில் தான் தம்பி ரொம்பவே கடுப்பாகி அண்ணனிடம் சமீப காலமாக பேசுவதே இல்லை என்கின்றனர்.

வாய்ப்புகள் காலி

வாய்ப்புகள் காலி

இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற நிலையில், அதிரடியாக நடித்தாவது சம்பாதிக்கலாம் என நினைத்த அவர், தெரியாத்தனமாக பலரது அறிவுரைகளை எல்லாம் கேட்காமல் அந்த படத்தில் நடித்த நிலையில், அதன் பிறகு கொள்கை ரீதியாக கோலிவுட்டில் பல முன்னணி இயக்குநர்களே அந்த இயக்குநரை நடிக்கக் கூட அழைக்கக் கூடாது என்கிற முடிவுக்கு வந்து விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

அம்மாவிடம் தூது

அம்மாவிடம் தூது

இந்நிலையில், எப்படியாவது தம்பியை வைத்து அந்த பிரம்மாண்ட படத்தை இயக்கி விட வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து குடும்பத்தினரை தூது விட்டு வருவதாகவும் சமீபத்தில் அண்ணனுக்காக அம்மா தம்பியிடம் தூது சென்றதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மீண்டும் ஒரு முறை தம்பி மனம் இறங்கி வந்து வளர்த்து விட்ட ஏணிக்காக கடைசி வாய்ப்பை கொடுப்பாரா என்பதை வெயிட் பண்னி பார்க்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X