எல்லாருக்கும் சான்ஸ் கொடுக்குறார்.. என்னை கண்டுக்க மாட்டேங்குறாரு.. புலம்பும் அண்ணன் இயக்குநர்!

சென்னை: அந்த ஒல்லி நடிகரின், அண்ணன் இயக்குநர், இயக்கத்தில் கடைசியாக வந்த அந்த அரசியல் படம் பயங்கரமாக அடிவாங்கியது.

புதிய படத்தை இயக்கலாம் என்று பார்த்தாலோ, எல்லா நடிகர்களும், இவரிடமா மாட்டவே கூடாது என எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

இந்நிலையில், தனது தம்பி நடிகருக்கு, தொடர்ந்து தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம் அந்த அண்ணன் இயக்குநர்.

ஒரு காலத்தில்

ஒரு காலத்தில்

காதல் படங்கள் என்றாலே, இந்த இயக்குநர் தான் முன்னணியில் இருந்தது எல்லாம் அது ஒரு கனா காலாமாக மாறி விட்டது. அந்த சரித்திர படத்திற்கு பிறகு, இவருக்கு தொற்றிக் கொண்ட ஹாலிவுட் ரேஞ்ச் ஆசை தான் இவரது சரிவுக்கு காரணம் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

விவாகரத்து பிரச்சனை

விவாகரத்து பிரச்சனை

தனது படத்தில் அறிமுகமான நடிகையுடன், ஏற்பட்ட காதலை தொடர்ந்து, அவரை திருமணம் செய்து கொண்ட அந்த இயக்குநர், அந்த வரலாற்று படத்தில், மற்றொரு நடிகையுடன் ஏற்பட்ட காதலால், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அந்த நடிகையும் அதன் பிறகு தவித்து வருகிறார்.

தம்பி செட்டில்

தம்பி செட்டில்

ஆனால், அண்ணன் தயவால், கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த தம்பி நடிகர், தொடர்ந்து உழைத்து, தனது முயற்சிகளால் அடுத்த கட்டத்திற்கு போயுள்ளார். மேலும், உச்ச நடிகரின் மாப்பிள்ளை ஆன பிறகு, இனிமேல் தனக்கென்ன கவலை என்றும், செம செட்டில் ஆகியுள்ளார் தம்பி நடிகர்.

பறக்கிறார்

பறக்கிறார்

பாலிவுட்டுதான், ஹாலிவுட்டு தான் என தம்பி நடிகர் உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணன் நடிகரோ, அவரை அண்ணாந்து பார்த்தபடி ஏக்கத்துடன், அடுத்த படத்தை எப்படியாவது தம்பியை வைத்து பண்ணி விட வேண்டும், சிக்க மாட்டேங்குறானே என்ற ஃபீலிங்கில் தவித்து வருகிறார்.

கிடைத்த வாய்ப்பை

கிடைத்த வாய்ப்பை

அல்வா போல, அந்த பிரைட் நடிகரின் படத்தை இயக்கும் வாய்ப்பு, அந்த அண்ணன் இயக்குநருக்கு கிடைத்தது. தரமான ஒரு படத்தை இயக்கி, தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து, திரும்ப வந்துட்டான் கபாலி என காலரை தூக்கி போடுவார், என்று பார்த்தால், அவரது படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கி வீசி விட்டனர்.

ஏமாந்த நடிகர்

ஏமாந்த நடிகர்

அய்யா பழைய ஐயிட்டங்காரர் ஆச்சே, பெரிய வித்தையை தனக்காக இறக்கி செமயா செய்வார் என்று எதிர்பார்த்த அந்த பிரைட் நடிகரை இவர் வச்சு செய்ய, அந்த நடிகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்னடா எவன் கிட்ட போனாலும், பல்பு கொடுக்குறாங்களே என அடுத்த படத்துக்கு தீவிரமா உழைத்துள்ளார்.

ஓகே

ஓகே

அண்ணனின் தொடர் புலம்பல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சிபாரிசுகளால், என்ன செய்வதென்றே தெரியாமல், சரி, கைவசம் இருக்கும் படத்தை எல்லாம் முடித்து விட்டு, ஒரு படம் பண்ணலாம் என தம்பி நடிகர் ஓகே சொல்லி உள்ளாராம். அந்த கேங்ஸ்டர் படம் அல்லது அந்த வரலாற்று படத்தின் இரண்டாம் பாகம் என இரண்டில் ஒரு கதையை தூசி தட்டி எழுதி வருகிறாராம் அந்த அண்ணன் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X