»   »  புத்தாண்டில் வெயிட்டான முடிவு எடுத்த புஸு புஸு நடிகை

புத்தாண்டில் வெயிட்டான முடிவு எடுத்த புஸு புஸு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி வெயிட்டான கதாபாத்திரங்களில் மட்டும் நடிப்பது என்று புஸு புஸு நடிகை முடிவு செய்துள்ளாராம்.

புஸு புஸு நடிகைக்கு கடந்த ஆண்டு சுமாரான ஆண்டாக தான் அமைந்துள்ளது. இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியாக உள்ள சுந்தரமான இயக்குனரின் படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். அந்த படத்திலும் சீனியர் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள கடுப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தன்னை ரசிகர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

Bubbly actress' new decision

அரசியலுக்கு தாவத் துடிக்கும் நடிகரின் படத்தில் தனக்கு சுத்தமாக முக்கியத்துவம் அளிக்காததும், படம் ஊத்திக் கொண்டதும் நடிகைக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது இனி தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம். வெயிட்டான கதாபாத்திரங்களை எதிர்பார்த்து தன்னைத் தேடி வரும் படங்களை எல்லாம் அவர் ஒப்புக் கொள்வது இல்லை.

ஏப்ப சாப்பையான கதாபாத்திரங்களில் நடித்து தனது மதிப்பை குறைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லையாம்.

English summary
Bubbly actress has reportedly decided to act in those movies that give importance to her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil