என் சொந்தக்கார பையனை மாஸ் ஹீரோவா ஆக்குங்க.. உங்க புல்லட் பிரச்சனையை நான் சால்வ் பண்றேன்!
Recommended Video
சென்னை: நீண்ட நாட்களாக வெடிக்க முடியாமல் துப்பாக்கியிலே சிக்கித் தவித்து வந்த புல்லட் படம் விரைவில் வெடிக்கப் போகிறது. இந்த புல்லட்டை வெடிக்க வைக்க அந்த ஒரு கண்டிஷனுக்கு அந்த இங்கிலிஷ் இயக்குநர் ஓகே சொன்னதால் தான் அந்த புல்லட் படமே தற்போது வெடிக்கப்போகிறதாம்.
தனது சொந்தக்கார பையனை மாஸ் ஹீரோவாக மாற்ற சமீபத்திய வெற்றி தயாரிப்பு நிறுவனம் போட்ட கண்டிஷன் தான் எல்லாத்துக்கும் காரணமாம்.
பல இயக்குநர்கள், இவரை எல்லாம் எப்படி மாஸ் ஹீரோவாக மாற்ற முடியும் என பின் வாங்கிய நிலையில், தனக்கு இருந்த கஷ்டங்களுக்கு யாரை வேணாலும் என்ன வேணாலும் ஆக்குகிறேன் என அந்த இங்கிலிஷ் இயக்குநர் வான்டட் ஆக வந்து வண்டியில் ஏறி இருக்கிறாராம்.

புல்லட் பாயுமா?
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அந்த புல்லட் படம் ஒரு வழியாக ரிலீசாக உள்ளது. ஆனால், அந்த படத்தின் கதை மற்றும் காட்சிகள் இந்நேரம் காலாவதி ஆகியிருக்கும் என்பதால், புல்லட் எந்தளவுக்கு வெற்றியை நோக்கிப் பாயும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஈர்ப்பு இல்லை
புல்லட் படத்தின் நாயகனுக்கு சமீபத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தாலும், புல்லட் படத்தின் நாயகிக்கு தமிழ் சினிமாவில் எப்பவோ மார்க்கெட் குறைந்துவிட்டதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய ஈர்ப்பு ஒன்றும் இல்லையாம். இதனால், படம் வெளியானாலும், எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்பது சந்தேகம் தானாம்.

இங்கிலிஷ் இயக்குநர் வேதனை
அந்த பிரபல இங்கிலிஷ் இயக்குநர், ஸ்டார் நடிகர்களை வைத்து ஜாலியாக படமெடுத்து வந்தார். ஆனால், திடீரென அவருக்கு ஏற்பட்ட சறுக்கலால், அறிமுக நடிகரையெல்லாம் ஸ்டாராக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், இங்கிலிஷ் இயக்குநர் மனதளவில் வேதனை அடைந்துள்ளாராம்.

சொந்தக்காரப் பையன்
அந்த வெற்றி தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்காரப் பையனை மாஸ் ஹீரோவாக்க எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் செலவு செய்ய அந்த நிறுவனம் முன் வந்துள்ளதாம். யார், கதை சொல்லப் போனாலும், சொந்தக்காரப் பையனுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என அந்த தயாரிப்பு நிறுவனம் டார்ச்சர் கொடுத்து வருகிறதாம்.

ஜாக்பாட்
வேண்டா வெருப்பாக அந்த தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்காரப் பையனை மாஸ் ஹீரோவாக மாற்ற ஏற்கனவே மாஸ் ஹீரோவுக்காக வைத்திருந்த கதையில் கொஞ்சம் ஆல்டர் பண்ணி படம் பண்ணி வருகிறார் அந்த இங்கிலிஷ் இயக்குநர். இந்நிலையில், அடுத்ததாக, உச்ச நடிகரை வைத்து படம் பண்ணும் திடீர் ஜாக்பாட் அந்த இங்கிலிஷ் இயக்குநருக்கு அடிக்கவுள்ளதாக வந்துள்ள செய்தி, அவருக்கு புது பூஸ்ட் கொடுத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











