விளம்பர நடிகையை பீச் பங்களாவுக்கு கூட்டிச் சென்று கூத்தடிக்கும் தொழிலதிபர் மகன்.. ஷாக்கில் குடும்பம்

By Staff

சென்னை: சென்னை இசிஆர் (ECR) என்றாலே பார்ட்டிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமிருக்காது. இப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு சொகுசு பீச் பங்களாவில் தான், தமிழகத்தின் மிகப்பிரபலமான அந்தப் பெருந்தொழிலதிபரின் மகனும், மாடலிங் துறையில் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கும் அந்த விளம்பர நடிகையும் முகாமிட்டுள்ளதாக கோலிவுட் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தொழிலதிபர் மகன் என்பதால் பணத்திற்கு எந்தக் குறையும் இல்லை. வார இறுதி நாட்கள் மட்டுமன்றி, வார நாட்களிலேயே அம்மணியை கார் நிறைய ஷாப்பிங் கூட்டிச் செல்வது, நகைக் கடைகளை காலி செய்வது என அம்மணியின் காலடியில் பணத்தைக் கொட்டி வருகிறாராம் அந்த வாரிசு புள்ளி. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தங்களுக்குச் சொந்தமான பிரம்மாண்ட பீச் பங்களாவை, இப்போது அந்த நடிகையின் சொகுசு உலகமாகவே மாற்றிவிட்டாராம்.

பகலில் தூக்கம், இரவில் பார்ட்டி, நண்பர்களுக்குத் தடபுடலான கவனிப்பு என அந்த பீச் பங்களாவே தினமும் அதிர்கிறதாம். நடிகையின் ஆசைக்கு இணங்க, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த மதுபானங்கள் மற்றும் உணவு வகைகளோடு தினமும் அங்கே கூத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Business Tycoon s Son and Glamour Actress Spark ECR Beach House Gossip

நடிகையின் வசியத்தில் வாரிசு: மகன் பிசினஸை கவனித்து, தங்களுக்குப் பிறகு சாம்ராஜ்யத்தை வழிநடத்துவான் என்று ஆசை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலதிபர் குடும்பத்திற்கு, இந்த விஷயம் சமீபத்தில்தான் தெரியவந்ததாம். வாரிசுப் புள்ளியின் இந்தத் திடீர் மாற்றத்தையும், நடிகையுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளையும் பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்களாம்.

கவலையில் குடும்பம்: "பிசினஸை கவனிடா" என்று அப்பா அறிவுரை கூறினால், "என் பர்சனல் விஷயத்தில் தலையிடாதீர்கள்" என்று வாரிசு எகிறுகிறாராம். விளம்பர நடிகையின் வசியத்தில் விழுந்து கிடக்கும் மகனை எப்படி மீட்டெடுப்பது, குடும்பப் பெயரை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் அந்தப் தொழிலதிபர் குடும்பம் இப்போது கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X