என்ன சொல்றீங்க.. அந்த பிரபல நடிகையின் படத்தை வாங்கவே பயப்படுறாங்களா.. அப்போ எல்லாம் அவ்ளோதானா?
சென்னை: பிரம்மாண்ட படங்களில் நடித்து கலக்கி வந்த நடிகை அந்த ஒரு படத்திற்காக தேவையில்லாம ரிஸ்க் எடுத்து தனது சினிமா வாழ்க்கையையே வீணடித்து விட்டார்.
இந்த நிலையில், மீண்டும் அந்த நடிகை வேற லெவலில் கம்பேக் ஆகப் போகிறார் என்றும், பல மொழிகளில் அவரது படம் ரிலீசாகப் போவதாகவும் பலமான அறிவிப்புகள் வெளியானது.
ஆனால், தற்போது அந்த குண்டு நடிகையின் படத்தை வாங்கவே ஆள் இல்லாமல் படம் ரிலீசாகுமா ஆகாதா என்ற சந்தேகத்தில் மாட்டித் தவிக்கிறதாம்.

டாப் ஹீரோயின்
தென்னிந்தியாவிலேயே டாப் ஹீரோயினாக வலம் வந்த அந்த நடிகை தேவையில்லாமல் ஒரு படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து சிக்கலில் சிக்கிக் கொண்டார். அதன் விளைவாக தனது பழைய கிளாமரை இழந்து இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் இழந்துவிட்டார்.

சோலோ ஹீரோயின்
இதனால், ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க முடிவு செய்த அந்த குண்டு நடிகைக்கு எதிர்பார்த்தபடி பெரிய படங்கள் அமையவில்லை.

ஏகப்பட்ட பில்டப்
இந்நிலையில், சத்தம் போடாமல் ஊமைப் படமாக உருவான அவரது புதிய படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டன. பெரிய பட்ஜெட்டில் ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என இஷ்டத்துக்கு அளக்கப்பட்டது.

பயப்படுறாங்க
ஆனால், இப்போ அந்த நடிகையின் படத்தை வாங்கவே விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் பயப்படுறாங்களாம். படத்தை காசு கொடுத்து வாங்கி போட்டா கலெக்ஷன் ஆகாது என்றும் ஓப்பனாகவே சொல்லிட்டாங்களாம்.

என்ன பிரச்சனை
படத்தின் தலைப்பை போலவே முதல் பாதி முழுவதும் சத்தமே காட்டாம ஊமைப் படம் போலவே நகர்வதால், ரசிகர்கள் அந்த படத்தை ஆர்வத்துடன் பார்க்க தியேட்டருக்கு வர மாட்டாங்க என்பது தான் இதில் பெரிய பிரச்சனை என்றும் பேசிக்கிறாங்க..

ரிலீஸ் ஆகுமா?
இந்த மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த அந்த படம் கடைசியில் படத்தை வாங்கவே ஆளில்லாததால் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியாத நிலை உருவாகியுள்ளது.

பயங்கர செலவு
வெளிநாடு ஷூட்டிங், பல மொழிகளில் டப்பிங், ஹாலிவுட் வில்லன் என ஏகத்துக்கும் செலவு செய்து தற்போது படத்தையே வாங்க ஆளில்லை என்றால் தயாரிப்பாளர் நிலைமை தான் படுமோசமான நிலைமையாக மாறியுள்ளது. குறைந்த விலைக்காவது தள்ளி விடலாம் என்ற யோசனைக்கும் வழி இல்லாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் படக்குழு புலம்பி வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











