வாய்ப்புக்காக பல நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட்.. இப்போ பக்கவாதம் வந்து படுத்த படுக்கையா இருக்காராம்?
சென்னை: தனது இடுப்பழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வந்த நடிகை சினிமா வாய்ப்புக்காக செய்யக் கூடாத வேலைகளை எல்லாம் அதிகம் பார்த்து வந்தாராம். அந்த வினை எல்லாம் தற்போது அந்த நடிகையை ரொம்பவே பாதித்து பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகைகள் டாப்பில் இருக்கும் போது பல நடிகர்களும் வலை வீசுவதும் சொல்வதை எல்லாம் செய்யவில்லை என்றால் சினிமாவில் இருந்தே தூக்கியடிப்பதும் என மோசமான செயல்கள் அனைத்து இடங்களிலும் இன்னமும் நடைமுறையில் இருந்து தான் வருகிறது என்கின்றனர்.

முன்னணி நடிகர்கள் பற்றியே சில நடிகைகள் சமீப காலமாக பலாத்கார குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த நிலையில், மலையாளத்தை சேர்ந்த சீனியர் இடுப்பழகி நடிகைக்குத் தான் தற்போது இந்த கதி எனக் கூறுகின்றனர்.
இடுப்பழகி நடிகை: மலையாளத்தில் 90களில் செம டாப் ஹீரோயினாக வலம் வந்த அந்த இடுப்பழகி நடிகை பல முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டு நடித்து வந்தார். அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கிய நிலையில், ஐட்டம் டான்சராக மாறிய அந்த நடிகை தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வேண்டும் என்பதால் தவறான பாதையை தேர்ந்தெடுத்தார் என்றும் அதனால் தான் தற்போது இப்படியொரு சிக்கலில் அவர் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
பக்கவாதம் வந்து பாதிப்பு: அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணினால் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கலாம் என சில நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து சில பல வாய்ப்புகளை பெற்று வந்த நடிகை ஒரு கட்டத்தில் உடல்நலம் ரொம்பவே மோசமாகி பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி விட்டார் என்றும் அவருடன் பழகிய எந்தவொரு நடிகரும் தற்போது அந்த நடிகைக்கு உதவ முன்வரவில்லை என்றும் மலையாள திரையுலகில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
மார்க்கெட் இருக்கும் வரைக்கும் தான் மதிப்பு: நடிகைகளுக்கு மார்க்கெட் இருக்கும் வரைக்கும் தான் மதிப்பு என்றும் அதற்குள் செட்டில் ஆகிவிடும் நடிகைகள் சந்தோஷமாக வாழ்கின்றனர். அதை மிஸ் செய்யும் நடிகைகள் குடித்து குடித்து உடல்நலத்தை கெடுத்துக் கொண்டு நோய் வாய்ப்பட்டு கிடந்தால் யாருமே அவர்களை தீண்டக் கூட மாட்டார்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











