எல்லாத்துக்கும் காரணம் வாரிசு தானாம்.. அதிக ஆசையால் அப்பாவின் பெயருக்கே வேட்டு வைத்துட்டாரா?

By Staff

சென்னை: ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் ஏற்று நடத்தும் பொறுப்பை அப்பாவிடம் இருந்து கேட்டு வாங்கிக் கொண்ட வாரிசு தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கிற ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

இதுவரை பலமுறை அந்த பிரபலம் நடத்திய நிகழ்ச்சிகளில் எல்லாம் எந்தவொரு தவறும் நடக்காமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வந்த நிலையில், வாரிசுக்கு அப்பா அளவுக்கு பொறுமையும் நேர்த்தியும் இல்லாதது தான் இப்படி ஒரு பிரளயமே நடக்க காரணம் என்கின்றனர்.

Celebrity son is the reason behind the biggest scam?

மேலும், பண விஷயத்தில் பார்ட்னர்ஷிப் வைத்தவர்களுடன் வாரிசு தனியாக பேரம் ஒன்றையும் நடத்தியதாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

அப்பவே நடந்திருந்தால்: திட்டமிட்ட தேதியிலேயே அந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் எந்தவொரு சிக்கலும் இந்தளவுக்கு ஏற்பட்டு அந்த பிரபலத்தின் பெயரை கெடுத்து இருக்காது என்றும் திட்டமிட்ட தேதியில் நடைபெறாத நிலையில், வேறு ஒரு தேதிக்கு நிகழ்ச்சியை மாற்றியமைத்த பிரபலம் ரசிகர்களுக்கு ஒரு வாக்குறுதியும் கொடுத்திருந்தார்.

அப்பாவுக்கு தெரியாமல் நான் பாத்துக்குறேன்: ஆனால், அந்த வாக்குறுதியை எல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம் என்றும் ஏராளமான பேருக்கு டிக்கெட்டை தாராளமாக விற்பனை செய்யுங்க அப்பாவுக்குத் தெரியாமல் நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் என மகனார் ஒரு தனி கணக்கு போட்டு கேம் ஆடியது தான் இப்படியொரு இக்கட்டான சூழல் உருவாக காரணம் என்கின்றனர்.

சிக்கிய நிர்வாகம்: இதுவரை பல பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அந்த பிரபல நிர்வாகத்துக்கு இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்த தெரியாதா என்ன என்கிற கேள்விகள் கிளம்பிய நிலையில், மகனை காப்பாற்ற அந்த பிரபலமும் போராடி வருவதாக கூறுகின்றனர். கூடுதலாக நிகழ்ச்சிக்கு ஆட்களை வரவழைத்து பெரிதாக சம்பாதிக்க நினைத்தது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கின்றனர்.

Celebrity son is the reason behind the biggest scam?

மகனுக்கு டோஸ்: இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு நடந்தால் இங்கே பிழைக்கவே முடியாது. எதிலும், பொறுமை ரொம்ப அவசியம், பேராசை கூடாது என மகனுக்கு சரியான டோஸ் விட்டிருக்கிறார் அப்பா என தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், அந்த நிர்வாகம் சின்ன பையனை ஏமாற்றி இந்த சிக்கலில் கோர்த்து விடப் பார்ப்பதற்கு கிளப்பியிருக்கும் வதந்தி தான் இது என்றும் இந்த பிரச்சனை குறித்து எந்தவொரு விவரமும் அவருக்கு முழுசாக தெரியாது என்றும் தேவையில்லாமல் சிலர் விரித்த சதி வலையில் சிக்கிக் கொண்டார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X