பிரபல நடிகை, கணவரை பற்றி வேறு மாதிரியாக பேசும் திரையுலகம்

By Siva

சென்னை: நடிகை ஒருவரின் திருமணம் குறித்து தான் ஒரு மாதிரியாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழகத்தில் பிறந்தவர் அந்த நடிகை. நன்றாக படித்துள்ளார். ஆனால் பெற்றோர் வழியில் செல்லாமல் நடிகையாகிவிட்டார். அதை அவரின் பெற்றோரும் எதிர்க்கவில்லை.

கொஞ்சம் வளரத் துவங்கியபோதே காதலரை திருமணம் செய்து கொண்டார்.

சமத்து

சமத்து

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம்பிடிக்காதவர். மேலும் படுகவர்ச்சியாக உடை அணிவது, சக நடிகருடன் சேர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடிப்பது போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். இயக்குநர் சொல்வது போன்று சமத்தாக நடித்துக் கொடுத்துவிடுவார்.

சந்தேகம்

சந்தேகம்

நடிகை தனது காதலரை திருமணம் செய்த போதிலும் அவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கவில்லை. கணவர் தனது வேலை காரணமாக வேறு இடத்தில் உள்ளார். நடிகை படங்களில் நடிக்க வசதியாக வேறு ஒரு இடத்தில் வசிக்கிறார். நேரம் கிடைக்கும்போது நடிகை கணவரை காண சென்று வருகிறார். இது தான் திரையுலகினருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மனைவி

மனைவி

நடிகை திருமணமாகிவிட்டது என்று பொய் சொல்கிறார். அது எப்படி கணவனும், மனைவியும் சேர்ந்தே இருக்க மாட்டார்களாம், ஆனால் அதனால் பிரச்சனையே இல்லையாம். மேலும் நடிகை யாருடன் எங்கு சென்றாலும் கணவர் கண்டுகொள்வது இல்லை. கணவர் என்ன செய்தாலும் நடிகையும் கண்டுகொள்வது இல்லை. இதை எல்லாம் பார்த்தால் அந்த திருமணம் பொய் என்று தெரிகிறது என பேசுகிறார்கள்.

காதல்

காதல்

என் கணவர் எனக்குத் தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது இல்லை, அவரும் அப்படித் தான் என்கிறார் நடிகை. காதலிப்பவர்களே தூரத்தில் இருந்தால் அது ஒர்க்அவுட் ஆகவில்லை என்று கூறி பிரிந்துவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது நடிகைக்கு மட்டும் திருமண வாழ்க்கை எப்படி ஒர்க்அவுட் ஆகிறது. அவர் எதையோ மறைக்கிறார் என்கிறார்கள் திரையுலகினர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நடிகை நடித்துள்ள சில காட்சிகளை பார்த்து ரசிகர்களே அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஆனால் அந்த கணவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனைவி என்ன செய்தாலும் எனக்கென்ன என்று ஒரு கணவர் இருக்கிறார் என்று நம்ப முடியவில்லை. நடிகை தான் திருமணமான பெண் என்று எதற்காகவோ நாடகமாடுகிறார் என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X