மடக்கி மடக்கி பவர் நடிகரை விளாசும் நடிகை.. கண்டுக்க மாட்டீங்கறாரேப்பா!
சென்னை: இந்த பவர் நடிகர் அமைதியான குணம் படைத்தவர் என்றாலும், உள்ளடி வேலைகள் செய்வதில் கில்லாடி. திரைதுறையில் தனக்கு போட்டியான நடிகரின் பெயரை முதலில் குறிப்பிட்டுவிட்டு, தனது பெயரை இரண்டாவதாக குறிப்பிட்டால் கோபித்துக் கொள்வாராம். இப்படி இருக்கையில் இந்த பவர் நடிகரை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை விளாசு விளாசு என விளாசி வருகிறார். ஆனாலும் பவர் நடிகர் கப்-சிப் என இருப்பது தான் பலரையும் ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பவர் நடிகரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தாலும், நடிகை பெரிதாக எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். ஆனால் பவர் நடிகரால் ஏற்பட்ட மிகப்பெரிய துயரத்திற்கு பவர் நடிகர் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதால், அன்று முதல் இந்த குணச்சித்திர நடிகை பவர் நடிகரை கருணையே இல்லாமல் விளாசி வருகிறார்.
நடிகை விளாசிய விளாசலுக்கு பவர் நடிகர் ஒன்றும் இல்லாமல் போவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலையில், பவர் நடிகரோ உச்சத்திற்குச் சென்றுவிட்டார். இதனால் அந்த நடிகை மட்டும் இல்லாமல், நடிகரை பிடிக்காத பலருமே செம்ம அப்செட் ஆனார்கள்.

குணச்சித்திர நடிகை: இப்படி இருக்கையில் நடிகரை முன்பைவிட கூடுதலாக கட்டம் கட்டி விளாசி வருகிறாராம் இந்த குணச்சித்திர நடிகை. படப்பிடிப்புத் தளத்தில் தன்னை எதிர்த்து யாராவது பேசினாலே அவர்களை தனது படத்தில் மட்டும் இல்லாமல் தமிழில் யார் படத்திலும் பணியாற்ற முடியாத அளவுக்கு செய்துவிடும் இந்த பவர் நடிகர், நடிகை போட்டு இந்த அளவுக்கு விளாசும் போது மிகவும் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
காத்துக் கொண்டு இருக்கும் ரசிகர்கள்: இது மட்டும் இல்லாமல், நடிகை எல்லாவற்றையும் நடிகருக்கு சாதகமாகவே பதிவிடுவது போல பதிவிட்டு நடிகரை ரொம்பவும் டேமேஜ் செய்து வருவதால் தான் நடிகை நடிகரை புகழ்கிறாரா இல்லை திட்டுகிறாரா என்று புரியாமல், வழக்கு தொடுக்காமல் இருக்கிறார்களாம். மேலும் நடிகை மீது ஒரு கண் வைத்துக் கொண்டே தான் இருக்கிறார்களாம், நடிகை தப்பித் தவறி ஏதாவது தவறு செய்தால் நடிகை மீது நடவடிக்கை எடுக்கலாம் என ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications