சாயா.. சாயா..
சாயா சிங் எதையோ தொலைத்தவர் போல காணப்படுகிறார். எல்லாம் காதல்படுத்தும் பாடுதான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
தமிழில் புதிய பட வாய்ப்புகளே இல்லாத நிலையில் லெமன் படத்தில் மட்டும் சாயாசிங் நடித்து வருகிறார். படப்பிடிப்புத் தளங்களில் படு சோகமாக காணப்படுகிறாராம்சாயா சிங்.
காதல் காட்சிகளில் கூட சுரத்து இல்லாமல் நடித்து விட்டுப் போகிறாராம். இதனால்ஏகப்பட்ட டேக்குகள் வாங்கி டைரக்டரை டென்ஷன்படுத்துகிறார் என்கிறார்கள்.
என்னாச்சு சாயாவுக்கு என்று விஷயம் தெரிந்தவர்களை ஓரம் கட்டி ஒற்றறிந்தபோது,சாயாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கும் (நடிகைகளுக்குமட்டும்தான் தொழிலதிபர்கள் ஈசியாக கிடைக்கிறார்கள்!) காதல் பத்திக்கிச்சாம்.
இரண்டு பேரும் ரொம்ப டீப்பாக லவ்வ ஆரம்பித்துள்ளார்களாம். சாயாவின் வீட்டுக்குமேட்டர் தெரிந்து சினம் கொண்டு சாயா சிங்கை கடிந்து கொண்டார்களாம். பார்க்ககூடாது, பேசக் கூடாது என்று கண்டிஷன் வேறாம்.
இதனால் கடுப்பாகி விட்டாராம் சாயாசிங். காதல் மேட்டரால் வீட்டில் தினமும்வாக்குவாதம், காச் மூச் கத்தல்தானாம். இதனால் வெறுப்படைந்துள்ள சாயா சிங்சோகமாக இருக்கிறார்.
இதுதான் ஷூட்டிங்கிலும் வெளிப்பட்டு டைரக்டரை வெறுப்படித்துள்ளதாம்.
வீட்டில் சண்டையால் பொலிவும் குறைந்து பொக்கை போல மாறியுள்ளார் சாயாசிங்.லெமன் முடிவதற்குள் அம்மணி, அவசரப்பட்டு கல்யாணம் கட்டிக் கொண்டு ஓடிவிடக் கூடாதே என்பதுதான் இப்போது லெமன் யூனிட்டாரின் இப்போதைய பெரியகவலையே.
இதனால் சாயா சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் வேகமாக சுட்டு வருகிறார்கள்.
பி.கு: இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினான ஹரிப்பிரியா படு கும்மாக கவர்ச்சிகாட்டியுள்ளார், ஒரு குத்தாட்டத்திலும் கசக்கிப் போட்டுள்ளார்.
இதற்கிடையே சாயா நடித்துள்ள சொல்லி அடிப்பேன் படம் இன்னும்முடியவில்லையாம். இதில் ஹீரோவாக நடிக்கிறார் விவேக். அவரிடம் படம் குறித்துக்கேட்டால்,
நான் பிறக்கும்போது ஆரம்பிச்ச படம்.. நடிச்சுக்கிட்டே இருக்கேன், இன்னும்முடிஞ்சபாடு இல்லை என்றார் குசும்பாக...


Click it and Unblock the Notifications