போர் அடிச்சிடுச்சாம்.. எஸ்கேப் ஆன காதலி.. வீண் பழியை சுமக்கும் மாஜி மனைவி? இதுவா காரணம்?

By Staff

சென்னை: முதல் மனைவியுடன் சந்தோஷமாக குடும்பத்தை நடத்த முடியாமல் 2வது காதலை தேடிச் செல்லும் பலருக்கும் இந்த பிரச்னை ஏற்படுவது சமீப காலத்தில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மனைவியின் அருமை புரியாமல் சில தனிப்பட்ட தேவைகளுக்காக இன்னொரு கனெக்‌ஷனை சில பிரபல நடிகர்களே நாடிச் செல்கின்றனர்.

ஆனால், நடிகர் திருமணம் ஆகி குழந்தைகளுக்கு அப்பா என்று தெரிந்தும் நடிகரோடு இணக்கமாக அவருக்கு தேவையான ஆசைகளை தீர்த்து வைக்க சிலர் வரக் காரணமே நடிகரின் பேங்க் பேலன்ஸ் தான் என்கின்றனர்.

Cheated Lover escaped from Actor s life and stirs controversy with ex wife shocks fans
Photo Credit:

ஆசை வார்த்தைக் காட்டி அந்த பிரபலத்தை மடக்கிய நடிகர் தற்போது மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிப்பதால் இதற்கு மேல் நடிகருடன் டிராவல் செய்ய முடியாது என நினைத்த பிரபலம் மாஜி மனைவியை பலி கடா ஆக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்கின்றனர்.

போர் அடிச்சிடுச்சு: நடிகரை பற்றி பெரிதாக நினைத்து அவருக்கு உறுதுணையாக வந்திருப்பது போன்று நாடகம் ஆடிய பிரபலம் சில வாரங்களிலேயே நடிகருடன் இருப்பது போர் அடித்து விட்டதாம். அதற்கு காரணம் அவர் நினைத்த அளவுக்கு தாராளமாக செலவு செய்யும் அளவுக்கு பண வசதி நடிகரிடம் இல்லை என்றும் நடிகருக்கு தலைக்கு மேல் கடன் சுமை அதிகரித்து இருப்பதும் நடிகரை நம்பி யாரும் இனிமேல் பணம் தர தயாராக இல்லை என்கிற உண்மை புரிந்ததுமே பிரபலம் உஷாராகி விட்டார் என்கின்றனர்.

எஸ்கேப் ஆன காதலி: மனைவியை தாண்டி மகிழ்ச்சிக்காக மட்டுமே காதலியை கரம் பிடிக்க நினைத்த நடிகருக்கு காதலியின் ஆசை வேறு விதமாக இருந்த நிலையில், தற்போது நடிகருக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார் என்கின்றனர். நடிகரும் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாற்றத்தில் மதுவுக்கு அடிமையாகி விட்டார் என்றும் அவர் சினிமாவிலும் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

Cheated Lover escaped from Actor s life and stirs controversy with ex wife shocks fans
Photo Credit:

மாஜி மனைவி மீது பழி: மனைவியை கழட்டிவிட்டு விட்டு நடிகரும் காதலியும் பல மாதங்கள் அடித்த கூத்துக்களின் போது மாஜி மனைவி குழந்தைகளுடன் தவித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் விரிசல் ஏற்பட அந்த வீண் பழியை அலேக்காக மாஜி மனைவி மீது சுமத்தி விட்டுச் சென்றுவிட்டது காலத்தின் கொடுமை என்றும் மாஜி மனைவி கடும் கோபத்தில் உள்ளார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X