»   »  டாப் கியரில் போகும் சேச்சி: கலக்கத்தில் சக நடிகைகள்

டாப் கியரில் போகும் சேச்சி: கலக்கத்தில் சக நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தளபதி, சிங்கம் என்று அந்த சேச்சி நடிகைக்கு வரும் வாய்ப்புகளை பார்த்து பிற நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

கேரளாவில் இருந்து வந்துள்ள சேச்சி நடிகை தான் தற்போது கோலிவுட் இயக்குனர்களின் மனம் கவர்ந்த ஹீரோயின். முதலில் காமெடி ஹீரோவுடன் ஜோடி சேர்ந்த அவர் காட்டில் வாய்ப்பு மழை சோவென பெய்கிறது.

மீண்டும் அதே காமெடி ஹீரோவுடன் அவர் ஜோடி சேர்ந்த நிலையில் சுள்ளான், தளபதி என்று இரண்டு பெரும் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தளபதியின் படத்தில் நடித்து வரும் வேளையில் அவருக்கு சிங்கம் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

பெரும்பாலும் சிங்கத்தின் அடுத்த படத்தில் சேச்சி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. இது தவிர விரல் நடிகரின் படத்தில் நடிக்க அவரை கூப்பிட்டுள்ளனர். ஆனால் அம்மணி தான் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இப்படி வந்த வேகத்தில் சேச்சியின் கெரியர் டாப் கியரில் செல்வதை பார்த்து மற்ற நடிகைகள் கலக்கத்தில் உள்ளார்களாம்.

English summary
Leading ladies of Kollywood are slightly taken aback as Chechi's career is going at a great speed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil