»   »  இனி 'செல்லம்' ரொம்ப காஸ்ட்லி: நாள் ஒன்றுக்கு ரூ.15 எல் மட்டுமே!

இனி 'செல்லம்' ரொம்ப காஸ்ட்லி: நாள் ஒன்றுக்கு ரூ.15 எல் மட்டுமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்லம் நடிகர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். மனிதர் நாள் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.

வில்லன் கதாபாத்திரமா கூப்பிடு செல்லத்தை என்று கூறும் அளவுக்கு செல்லம் நடிகர் வில்லத்தனம் செய்வதில் கைதேர்ந்தவர். அதனால் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் செல்லம் நடிகருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். செல்லம் நாள் கணக்கில் சம்பளம் வாங்குவார். இந்நிலையில் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். நாள் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் சம்பளமாம்.

செல்லம் எவ்வளவு கேட்டாலும் கொடுத்து அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயாராக உள்ளனர். இந்நிலையில் செல்லம் பாலிவுட்டில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழில் அவர் இயக்கி, நடித்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். அவரின் கதாபாத்திரத்தை விவசாயிகளின் நண்பர் நடிகருக்கு அளித்துள்ளார்.

English summary
Chellam villain has reportedly increased his remuneration as it is raining film offers for him.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil