»   »  மேக்கப் போட்டு திட்டு வாங்கிய மெட்ராஸ் நாயகி

மேக்கப் போட்டு திட்டு வாங்கிய மெட்ராஸ் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நாயகனின் மனங்கவர்ந்த அரசியாக நடித்து, ரசிகர்களைக் கவர்ந்தவர் அந்த நடிகை.

அந்தப் படத்திற்குப் பின்னர் வேறு படங்கள் எதுவும் நடிகைக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இந்நிலையில் தற்போது சங்கச் செயலாளருடன் நாட்டியத்தை மையமாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை எடுத்து வரும் குழந்தை இயக்குனருக்கு இவர் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்வது பிடிக்கவில்லையாம். இதனை நேரடியாக சொல்லாமல் ஜாடைமாடையாக தனது உதவி இயக்குனர்கள் மூலம் சொல்லிப் பார்த்தார்.

இயக்குனரின் பேச்சுக்களை காதில் வாங்கிக் கொள்ளாத நாயகி தனது மேக்கப் படலத்தை சந்தோஷமாக தொடர்ந்து வந்தாராம். இதனால் கோபமடைந்த இயக்குநர் சமீபத்தில் நடிகையைக் கண்டபடி திட்டி விட்டாராம்.

நடிகையைத் திட்டும்போது நிறைய மேக்கப் போடாதே, வேஷம் போட்ட மாதிரி இருக்கிறது என்று கூறியதில் பயந்து போன நடிகை இப்போது முகத்துக்கு பவுடர் கூட பூசுவதில்லையாம்.

இதைக் கேள்விப்பட்டவர்கள் என்னது அந்த இயக்குநர் திட்டினாரா என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனராம்.

English summary
Recent Movie Chennai Actress Put Over Makeup in Shooting Spot, The Director Says "Do Not Put a Lot of Makeup".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil