அய்யய்யோ.. அதைப் பத்திச் சொன்னா உண்மையான வயசு தெரிஞ்சுடும்.. ரகசியத்தை மூடி மறைக்கும் பிரபல நடிகை!

தன் உண்மையான வயதை மறைக்க குளிர்ச்சியான நடிகை மிகவும் மெனக்கெடுகிறாராம்.

Recommended Video

உண்மை வயதை மறைக்கும் நடிகை-வீடியோ

சென்னை: இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்வதில் ஆர்வம் காட்டி வரும் குளிரான நடிகை, தன் முதல் படம் பற்றிய விபரத்தை மட்டும் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லையாம்.

ஒரே படத்தில் ஓஹோ வாழ்க்கை என்பது இந்த நடிகைக்குத்தான் கச்சிதமாகப் பொருந்தும். ஆரம்பத்தில் விஜயமானவருடன் நடித்துக் கூட கிடைக்காத புகழையும், பாராட்டையும் அம்மாவாக நடித்து அப்ளாஸாக வாங்கினார். அந்த ஒரே படத்திலேயே திறமையான நடிகை என்ற பெயர் கிடைத்தது.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரங்களாக நடிகையின் வாசலைத் தேடி வர ஆரம்பித்தன. நடிகையும் தன் நடிப்புத் திறமையால் எல்லா பால்களிலும் சிக்ஸர் அடித்தார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தற்போது தமிழில் முன்னணி நடிகைகளுல் ஒருவராக வலம் வருகிறார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்து விடுவார் என்ற பெயர் நடிகைக்கு உள்ளது. இதனாலேயே நல்ல கதாபாத்திரம் என்றாலே இந்த நடிகையைத் தேடித் தான் செல்கிறார்கள்.

தோற்றம்

தோற்றம்

ஒரு படத்தில் பள்ளி மாணவியாகக் கூட நடித்தார். இதனால் அவர் மிகவும் வயது குறைந்தவராகவே மக்களால் பார்க்கப்படுகிறார். நடிகையும் இளம் வயது நாயகர்களுடனே அதிகம் நடிக்கிறார். அவரது உடல் வாகும் இளமையாகவே இருப்பதால் வயது குறைவாகவே தோற்றமளிக்கிறார்.

அறிமுக படம்

அறிமுக படம்

ஆனால் நிஜத்தில் அது உண்மையில்லையாம். நடிகை அறிமுகமான படமே மிகவும் பழைய ஒன்று தானாம். தனது பேட்டிகளில் அந்தப் பெயரைக் கூறினால், நடிகையின் வயது அம்பலமாகி விடும் என்பதால், அதை அவர் தவிர்த்து விடுகிறார். இதனை அவரை அறிமுகப் படுத்திய இயக்குநரே பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.

ரகசியம்

ரகசியம்

கத்தரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வராமலா போய் விடும். நடிகை என்னதான் தன் வயதை மறைத்தாலும், அவரது முதல் படம் அதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. எனவே தான் பாலீசாக அந்தக் கேள்வியையே தனது பேட்டிகளில் தவிர்த்து விடுகிறாராம். அதற்கு பதில் வேறொரு படத்தைப் பற்றித் தான் அவர் அதிகம் பேசுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X