நடிகரிடம் ஸ்விட்ச் போட்ட இயக்குநர்.. நடிகையிடம் எரிந்த பல்பு.. ஓவர் நெருக்கத்திற்கு காரணமே இதுதானா?
மும்பை: இந்த நடிகை திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து எப்படியும் 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனாலும் இந்த 20 ஆண்டுகளில் இந்த நடிகை இப்போதைக்கு இந்திய அளவில் கவனம் பெறும் நடிகையாக வலம் வருகிறார். நடிகை சமீபத்தில் காதல் தோல்வியை எதிர் கொண்டார். ஆனால் அதற்கு காரணமே அவர் நடித்த ஒரு படத்தின் இயக்குநர் தான் என்று கூறப்படுகிறது.
அதாவது, நடிகை ஒரு பாலிவுட் படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தின் கதையை நடிகையிடம் இயக்குநர் கூறும்போது படத்தில் கொஞ்சம் கிளாமரான காட்சிகள் உள்ளது, படுக்கையறைக் காட்சிகள் எல்லாம் உள்ளது என்று கூறிதான் கதையைச் சொல்லி உள்ளார். நடிகையும் அதெல்லாம் ஒன்றும் பிரச்னை இல்லை. என்னிடத்தில் எனக்கான டூப் நடிகை ஒருவர் இருக்கிறார். அவரை நடிக்க வைத்து விடலாம் என்று கூறியுள்ளார். இயக்குநரும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்துள்ளார்.
ஆனாலும் இயக்குநருக்கு நடிகையிடம் தனியாக க்ளோசப் வைத்து எக்ஷ்பிரஷன்களை வாங்குவதைக் காட்டிலும் நடிகையே படுக்கயறைக் காட்சிகளில் நடித்து, அப்படி நடிக்கும் போது அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை வாங்க வேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்துள்ளார். இயக்குநர் நாம் சொன்ன கண்டிஷனுக்கு ஓகே சொல்லிவிட்டார் என்று நடிகையும் நிம்மதியாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார்.

இயக்குநரின் குறுக்குப் புத்தி: ஆனால் தனது படத்திற்கு நடிகையே நடித்தால் தான் நன்றாக இருக்கும். எனவே நடிகையை ஒத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் போட்ட பக்கா பிளான் தான், நடிகையையே படத்தில் நடிக்க வைத்துள்ளது. அதாவது படத்தில் நடிகைக்கு ஜோடியாக நடித்த நடிகரிடம் விஷயத்தைச் சொல்லி, நடிகையுடன் நீங்கள் டேட் செய்தால், அதில் உங்களுக்கு ஒத்துப்போனால் படுக்கையறைக் காட்சிகளிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடிகையே நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கூறியுள்ளார்.
காதல் வலை: இயக்குநர் சொன்னதை போலவே நடிகர் நடிகையை தனது காதல் வலையில் விழ வைத்து விட்டார். இயக்குநரும் உஷாராக இவர்களின் படுக்கையறை காட்சிகளை கடைசியில் படமாக்க ஷெட்யூல் செய்து வைத்துள்ளார். படுக்கையறை காட்சிகளை படமாக்க வேண்டும் எனவே அடுத்த ஷெட்யூலுக்கு உங்களின் டூப் நடிகையுடன் வந்துடுங்க மேடம் என்று இயக்குநர் தரப்பில் இருந்து கேஷுவலாக கூறி உள்ளார்கள்.
ஒர்க் அவுட் ஆன ஸ்கெட்ச்: நடிகையோ தனது காதலருடன் மற்றொரு பெண்ணை நெருக்கமாக நடிக்க வைக்க சம்மதிக்காமல் தானே நடிப்பதாக கூறி உள்ளார். இயக்குநர் போட்ட பிளான் படி நடிகையே படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் நடிகரும் நடிகையுடனான காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளார். எல்லாம் முடிந்த பின்னர், படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 4, 5 மாதங்களுக்குப் பின்னர் நடிகரோ நடிகையை நைசாக கழட்டி விட்டுவிட்டாராம். இயக்குநர் போட்ட பிளான் நடிகைக்கு சமீபத்தில் தான் தெரியவந்ததாம்.


Click it and Unblock the Notifications











