twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பிரச்னை முடிஞ்சாலும் கிடைக்குமோ, கிடைக்காதோ? சத்தம் போடாம இந்த முடிவை எடுத்திருக்காங்களாம்!

    By
    |

    சென்னை: கிடைத்தவரை லாபம் என்று இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் சினிமாவில்.

    Recommended Video

    25 லட்சம் கொடுத்த பெயர் சொல்ல விரும்பாத அந்த நடிகர் | FILMIBEAT TAMIL

    கொரோனா எல்லா திட்டங்களையும் தலைகீழாக மாற்றி போட்டிருக்கிறது. இதனால், உலக நாடுகளில் இருந்து உள்ளூர் வரை கடும் பாதிப்பில் இருக்கிறது.

    உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றன, உலக நாடுகள்.

    200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்.. மனிதாபிமானத்துடன் ரகுல்.. மற்ற நடிகைகளும் உதவலாமே !200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்.. மனிதாபிமானத்துடன் ரகுல்.. மற்ற நடிகைகளும் உதவலாமே !

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    இந்தியாவுக்குள்ளும் நுழைந்த கொரோனா, அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இங்கும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

    பைனான்ஸ்

    பைனான்ஸ்

    சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் சினிமா துறையும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளன. ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. பெரிய படங்களாவது பரவாயில்லை. சிறிய பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பைனான்ஸ் வாங்கிதான் படம் தயாரிக்கிறார்கள்.

    சந்தேகம்

    சந்தேகம்

    இதற்காகவே இருக்கும் பைனான்ஸியர்கள், பல படங்களுக்கு கோடிகளில் கடன் கொடுத்திருக்கிறார்கள். இந்த கொரோனா பிரச்னை முடிய இன்னும் சில மாதம் ஆகும் என்று நினைக்கும் அவர்கள், பிரச்னை முடிந்தாலும் தியேட்டர்களுக்கு மக்கள் உடனடியாக வருவார்களா என்று சந்தேகம் கொள்கிறார்கள்.

    அசல் மட்டுமாவது

    அசல் மட்டுமாவது

    மக்கள் இயல்பு நிலைக்கு வரவே சில மாதங்கள் ஆகும் என்பதால், சில சினிமா பைனான்சியர்கள் இப்படி ஒரு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, பெரிய படங்களை தவிர வேறு யாருக்கும் இனி பைனான்ஸ் பண்ண வேண்டாம். ஏற்கனவே கொடுத்த பணத்தில், அசலை மட்டுமாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.

    English summary
    Cinema financiers has taken this decetion
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X